- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த 3 சூப்பர் ஹிட் படங்களிலும் நாயகியாக நடித்திருக்க வேண்டியது நான்தான், அவர்கள்தான் தடுத்து விட்டனர்...

அந்த 3 சூப்பர் ஹிட் படங்களிலும் நாயகியாக நடித்திருக்க வேண்டியது நான்தான், அவர்கள்தான் தடுத்து விட்டனர் – நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆதங்கம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகர் சரத்குமார். கடந்த 1990களில் பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்தவர். தயாரிப்பாளராக சினிமாவுக்குள் வந்த சரத்குமாரை புலன் விசாரணை படம் மூலம் நடிகராக்கியவர் கேப்டன் விஜயகாந்த் தான். பிறகு தான் சரத்குமார் பல படங்களில் நடித்தார்.

சேரன் பாண்டியன் நாட்டாமை நட்புக்காக சமுத்திரம் சூரியவம்சம் என பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் சரத்குமார் இப்போதும் படங்களில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் அரசியல் களத்திலும் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார். அவரது மனைவி ராதிகாவும் அரசியல் நடிப்பு என பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் போடா போடி படம் மூலம் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். ஆனால் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. எனினும் வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

சண்டக்கோழி 2 சர்கார் கன்னிராசி 2 மதகஜ ராஜா தாரை தப்பட்டை நீயா 2 மாரி 2 ராயன் ஹனுமான் மதகஜ ராஜா என பல படங்களில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் மிக முக்கியமான வெற்றிப் படங்களில் எனக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியவில்லை என்று வருத்தமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி நடிகை வரலட்சுமி சரத்குமார் அந்த நேர்காணலில் கூறியதாவது, ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அப்பா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அப்போது எனக்கு 17 அல்லது 18 வயது தான் இருக்கும். அதேபோல் 7ஜி ரெயின்போ காலனி படத்திலும் நாயகியாக நடிக்க என்னை கேட்டனர்.

அப்போதும் எனக்கு இளம் வயதுதான். அதேபோல் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்திலும் நான் நடித்திருக்க வேண்டும். என்னை வெங்கட் பிரபு நடிக்க அழைப்பு விடுத்தார். ஆனால் எனக்கு வயது ரொம்ப குறைவாக இருந்ததால் என் பெற்றோர் ஒத்துக் கொள்ளாதால் நான் அந்த படத்திலும் நடிக்க முடியவில்லை என்று வரலட்சுமி சரத்குமார் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்