- Advertisement -
Homeபொழுதுபோக்குகல்கி படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்த கமல்ஹாசன் யாருக்கு சிபாரிசு செய்தார் தெரியுமா? - ...

கல்கி படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்த கமல்ஹாசன் யாருக்கு சிபாரிசு செய்தார் தெரியுமா? – ஏலே கமல் ஒரு ஆர்ட்டிஸ்ட்டுன்னு நிரூபிச்சிட்டாருலே…!

- Advertisement -

நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிய படம் புராஜெக்ட் கே என்கிற கல்கி 2898. 800 கோடி ரூபாய்க்கு மேல் மிகப்பெரிய செலவில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

மேலும், நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். 2 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள கல்கி படத்தில் முதல் பாகத்தில் 19 நிமிடங்கள் மட்டுமே வரும் கமல்ஹாசன், 2வது பாகத்தில் ஒன்றரை மணி நேரம் வருகிறார். அதனால் 2ம் பாகத்தில் அவரது நடிப்பு மாஸ் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

வழக்கமாக ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் போன்ற பெரிய நடிகர்கள், தங்களது படங்களில் 2 கேரக்டர்களில் ஒரு கேரக்டரில் வில்லனாக நடிப்பதுதான் வழக்கம். கமலும் கூட ஆளவந்தான் படத்தில் நந்து கேரக்டரில் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் இந்த முறை பிரபாஸ் ஹீரோ என்ற நிலையில், அவருக்கு வில்லனாக கமல் நடித்திருக்கிறார்.

வருகிற ஜூன் 27ம் தேதி கல்கி படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் என்பதால், வினியோகஸ்தர்கள் குறிப்பிட்ட பெரும்தொகையை அட்வான்ஸ் ஆக கொடுத்துவிட்டு தியேட்டர் உரிமை பெற படத்தின் தயாரிப்பு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை கல்கி படத்தின் தியேட்டர் உரிமையை எந்த வினிேயாகஸ்தரும் பெறவில்லை.

- Advertisement -

அதற்கு முக்கிய காரணம், இந்த கல்கி 2898 படத்தை தியேட்டர்களில் வெளியிட, உதயநிதி ஸ்டாலினின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் முயற்சித்து வருகிறது. ஆனால் இந்த நிறுவனம், படத்தை ப்ரீ டிஸ்ட்ரிப்யூசன் முறையில் முதலில் வாங்கி, தனது பேனரில் தியேட்டரில் ரிலீஸ் செய்துவிட்டு, பிறகு குறிப்பிட்ட கமிஷனை எடுத்துக்கொண்டு படத்தயாரிப்பாளர்களுக்கு உரிய தொகையை சரியாக கொடுத்து விடுகிறது. இதுதான் வழக்கமாக இருந்து வருகிறது.

இதே போன்று கல்கி படத்தையும் ப்ரீ டிஸ்ட்ரிப்யூசன் முறையில் வாங்கி, தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் வெளியிட, ரெட் ஜெயிண்ட் மூவி முயற்சித்து வருகிறது. ஆனால், முதலில் அட்வான்ஸ் தொகையை வாங்கும் முயற்சியில், படத்தயாரிப்பு நிறுவனம் முனைப்பாக உள்ளது. இதற்கிடையே கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசி அவருக்கு கல்கி படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை பெற்றுத் தரும் நடவடிக்கையில் உள்ளார். படத்தின் வில்லனே அவர்தான் என்பதால், இதற்கு கல்கி படக்குழுவினர் சம்மதித்து விடுவர் என்று தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்