- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா இது தரமான சம்பவத்தை செய்யப் போகும் திரில்லர் கூட்டணி தான் - ராகவா லாரன்ஸ்...

அடேங்கப்பா இது தரமான சம்பவத்தை செய்யப் போகும் திரில்லர் கூட்டணி தான் – ராகவா லாரன்ஸ் படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

நடன இயக்குனர் நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். மேலும் சமூக ஆர்வலரான இவர் மாற்றம் என்ற சேவை அமைப்பை தொடங்கி வறுமையில் கஷ்டப்படும் மக்களுக்கு பலவிதமான உதவிகளை செய்து வருகிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் இப்போது பென்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் அவரது திரில்லர் பட வரிசையில் காஞ்சனா 4 படத்தையும் அவரே இயக்கி தயாரித்து நடித்தும் வருகிறார். முனி படத்தின் அபார வெற்றிக்கு பிறகு காஞ்சனா காஞ்சனா 2 காஞ்சனா 3 ஆகிய திரில்லர் படங்களை ராகவா லாரன்ஸ் ரசிகர்களுக்கு தந்திருக்கிறார்.

- Advertisement -

இதற்கிடையே தமிழ் சினிமாவில் கடந்த 2015ம் ஆண்டில் டிமாண்டி காலனி என்ற திரில்லர் படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை பெற்றவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. பிறகு 9 ஆண்டுகள் கழித்து டிமாண்டி காலனி 2 படத்தை இயக்கினார். அந்த படமும் கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த அருள்நிதி 2ம் பாகத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். 2ம் பாகத்தில் அருள்நிதியை விட நடிப்பில் அட்டகாசமாக ஸ்கோர் செய்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்தான். அதே போல் டிமாண்டி காலனி 3 படமும் உருவாகி விட்டது. இந்த படத்தில் அருள்நிதி பிரியா பவானி சங்கர் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.

- Advertisement -

டிமாண்டி காலனி படம் 6 பாகங்களாக வெளிவரும் அளவுக்கு இப்போதே கதைகள் தயாராக இருப்பதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறிய நிலையில், மிக விரைவில் டிமாண்டி காலனி 3 திரைக்கு வர உள்ளது. மேலும் அடுத்ததாக அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் என்ற லேட்டஸ்ட் தகவல் கசிந்துள்ளது.

அஜய் ஞானமுத்து மற்றும் ராகவா லாரன்ஸ் இருவருமே திகில் கதை மன்னர்கள். திரில்லர் படம் எடுத்து ரசிகர்களை மிரட்டி வருபவர்கள். அவர்கள் இருவரும் இணைந்து ஒரு திரில்லர் படம் உருவானால் அது வேற லெவல் தரமான சம்பவமாக இருக்கும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போதே பேச துவங்கி விட்டனர். விரைவில் இந்த படம் குறித்த புதிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது

- Advertisement -

சற்று முன்