- Advertisement -
Homeபொழுதுபோக்குநவரச நாயகன் கார்த்திக் மாதிரி நீங்களும் ஆகிடாதீங்க - நடிகர் அஜீத்குமாரை எச்சரித்த விஜய் பட...

நவரச நாயகன் கார்த்திக் மாதிரி நீங்களும் ஆகிடாதீங்க – நடிகர் அஜீத்குமாரை எச்சரித்த விஜய் பட இயக்குனர்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் 4 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இதில் ரஜினி கமல் இருவரும் சீனியர் நடிகர்கள். விஜய் அரசியலுக்கு சென்று தமிழக முதல்வராகி விட்டார். அதனால் அஜீத்குமாருக்கு நிறைய பட வாய்ப்புகள் இருந்தாலும் அவர் கார் ரேஸ்சில் அதிக கவனம் செலுத்தி, ஆண்டுக்கணக்கில் படங்களில் நடிக்காமல் இருக்கிறார்.

கடந்த 1980 90களில் தமிழ் சினிமாவில் ரஜினி கமல் விஜயகாந்த் வரிசையில் மிக முக்கியமான ஒரு நடிகராக இருந்தவர் நவரச நாயகன் முத்துராமன். கமலுக்கு அடுத்தபடியாக நடிப்பில் புகழ்பெற்ற ஒரு கலைஞராக அவர் இருந்தும் அடுத்தடுத்த படங்களில் நடிக்காமல் பெரிய இடைவெளி விட்டதே அவரது முன்னேற்றத்துக்கு பெரிய தடையாக மாறியது.

- Advertisement -

ஒருகட்டத்தில் சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டார். அதுபோன்ற ஒரு நிலைமை நடிகர் அஜீத்குமாருக்கு வந்துவிடக் கூடாது என இயக்குனர் பேரரசு எச்சரித்துள்ளார். நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி சிவகாசி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் பேரரசு. அஜீத்குமார் நடித்த திருப்பதி படத்தையும் அவர் டைரக்ட் செய்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் பேரரசு கூறியதாவது, அஜீத் சார் கிட்ட நான் வைக்கிற ஒரு வேண்டுகோள் இதுதான். சினிமாவுல ரொம்பவும் இடைவெளி விட்டுடாதீங்க. பழைய நடிகர் நவரச நாயகன் கார்த்திக் இப்படித்தான் நிறைய இடைவெளி விட்டார். அவருக்கு அப்புறம் இன்னொரு கார்த்தி வந்துட்டார்.

- Advertisement -

அதே மாதிரி நீங்க ரேஸ் ரேஸ்ன்னு எப்பவும் சுத்திக்கிட்டே இருந்தீங்க என்றால் இன்னைக்கு பாருங்க, அஜீத் என்கிற பெயரில் இன்னொரு நடிகர் வந்து விட்டார். ஒரு நடிகர் பெயரில் இன்னொரு நடிகர் வருகிறார் என்றால் அந்த நடிகர் பெரிய இடைவெளி விடுகிறார் என்றுதான் அர்த்தம்.

உடனே கார் ரேஸ் எல்லாம் சீக்கிரம் முடிச்சிட்டு சினிமாவுக்கு வந்து விடுங்கள். இல்லை என்றால் இப்போது அஜீத் என்று ஒருவர் வந்த மாதிரி ஏகே என்ற பெயரில் இன்னொரு நடிகரும் வந்து விடுவார் என்று இயக்குனர் பேரரசு எச்சரிக்கும் விதமாக கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்