- Advertisement -
Homeபொழுதுபோக்கு10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் விஜயிடம் மனு அளித்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம்...

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் விஜயிடம் மனு அளித்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் – 24 மணி நேரமும் காட்சிகள் திரையிட கோரிக்கை!

- Advertisement -

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்து 10 அம்ச கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, மல்டிபிளக்ஸ் மாற்றங்களுக்கான ஒற்றைச் சாளர முறை எளிமைப்படுத்துதல். இதற்காக கட்டிடம் மற்றும் செயல்பாட்டு விதிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இதற்கான ஒப்புதல் காலக்கெடு 2 வாரங்களாக இருக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகள் உரிமம் புதுப்பித்தல் சுழற்சியை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள 100 சதவீத திரைகளும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விட்டன. எனவே தற்போது காலாவதியாகிவிட்ட இடத்திற்கான கட்டாய பு்ரோஜெக்டிஸ்க் ஆபரேட்டர் உரிம தேவைகளை நீக்க வேண்டும்.

- Advertisement -

தமிழ் மொழி திரைப்படங்களுக்கு 4 சதவீத பொழுதுபோக்கு வரியை ரத்து செய்ய வேண்டும். இது நேரடியாக கட்டண குறைப்புக்கு வழிவகுக்கும். சந்தை தேவையின் அடிப்படையில் 24 மணி நேரமும் காட்சிகளை திரையிடவும் சுழற்சி முறையில் இயக்கவும் அனுமதிக்க வேண்டும். திரையரங்கை பாதுகாக்க 8 வாரம் கழித்துதான் ஒரு படத்தை ஓடிடியில் திரையிட அனுமதிக்க வேண்டும்.

நவீன மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட திரையரங்குகளுக்கு குறிப்பாக பிரிமியம் லார்ஜ் பர்மிட் மற்றும் சாய்வு இருக்கை வசதி கொண்ட சொகுசு திரைகளுக்கு 450 ரூபாய் வரையிலும், சாதாரண திரையரங்குகளுக்கு 300 ரூபாய் வரையிலும் அதிகபட்ச கட்டண வரம்பை முன்மொழிகிறோம். மாநிலத்தின் மின் கட்டணங்கள் அதிகப்படியான நிலையான மற்றும் வணிக ரீதியான நுகர்வு கட்டணங்கள் மூலம் திரையரங்குகளுக்கு பெரும் நிதிச் சுமை ஏற்படுகிறது.

- Advertisement -

எனவே காட்சி துறைக்கு மின் கட்டண சலுகைகள் அல்லது சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அடுக்கு நன்மைகளை வழங்க வேண்டும். சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு மாநில அரசு கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும். திரையரங்க அரங்குகளை பல்துறை பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்.

உதாரணமாக நேரடி விளையாட்டு போட்டிகளை திரையிடுதல், ஸ்டாண்ட் – அப் காமெடி கார்ப்பரேட் மற்றும் தனியார் நிகழ்ச்சிகள், வீடியோ கான்பரன்சிங் மற்றும் கல்வி சார்ந்த கருத்து அரங்கங்கள் போன்ற மாற்று சமூக கலாச்சார நிகழ்வுகளுக்காக திரைப்படம் திரையிடாத நேரங்களில் இந்த அரங்குகளை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் 10 அம்ச கோரிக்கைகள் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்