- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் விளம்பர படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகர் அஜீத்குமார் - ஏகே 64 படம்...

மீண்டும் விளம்பர படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகர் அஜீத்குமார் – ஏகே 64 படம் எப்போது படப்பிடிப்பு? அப்செட் ஆன ஏகே ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. அந்த படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் அவரது அடுத்த படம் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்கிற தகவலும் இல்லை. இது அவரது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

இதற்கிடையே அஜீத்குமார் பங்கேற்ற பல கார் ரேஸ் போட்டிகளை ஒரு ஆவணப்படமாக தயாரித்து உள்ளனர். இந்த ஆவண படத்தை இயக்குனர் ஏஏல் விஜய் டைரக்ட் செய்திருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்பு இதன் டீசர் வெளியான நிலையில் விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

- Advertisement -

ஆனால் இது வழக்கமான திரைப்படம் போல இல்லாது அஜீத்குமாரின் கார் ரேஸ் வீடியோக்களை அடக்கிய ஒரு டாகுமென்ட்ரி ஃபிலிம் போல தான் இருக்கும். அதனால் இந்த படம் பெரிய அளவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஏகே ரசிகர்கள் மட்டுமே விரும்பி பார்க்கலாம்.

இந்நிலையில் நடிகர் அஜீத்குமாரின் தாயார் மோகினி மணி நேற்று காலமானார். இன்று அவரது இறுதி சடங்குகள் நடந்துள்ள நிலையில் சில மாதங்களுக்கு அஜீத்குமார் படப்பிடிப்புகளில் கலந்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்காது. அதனால் ஏகே 64 படப்பிடிப்பு இந்த ஆண்டில் துவங்கப்படுமா என்பதே கேள்விக்குறிதான்.

- Advertisement -

இந்நிலையில் ஏற்கனவே கேம்ப்பா என்கிற குளிர்பானம் விளம்பர படம் ஒன்றில் நடிகர் அஜீத்குமார் நடித்துள்ளார். இந்த குளிர்பான விளம்பரத்தை தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் புதிய கட்டுமான நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

வலிமை மற்றும் துணிவு படங்கள் வெளியான பிறகு 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி குட் பேட் அக்லி படங்கள் வெளியானது. இப்போது ஆவணப்படம் விளம்பர படங்கள் என அஜீத்குமார் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். மற்ற நாட்களில் கார் ரேஸில் ஆர்வம் காட்டுகிறார். நடிகர் விஜயும் முதல்வரான நிலையில் அஜீத்குமாரும் படங்களில் நடிக்காமல் இருப்பது இளம் சினிமா ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்