- Advertisement -
Homeபொழுதுபோக்குஆண்டுக்கணக்கில் நீடிக்கும் இழுபறி - இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்த அதிரடி முடிவு, ஏகே 64...

ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் இழுபறி – இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்த அதிரடி முடிவு, ஏகே 64 படத்தை விட்டு விலகல் – அவரது புது ஹீரோ யார் தெரியுமா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். ஏகேவின் மிக தீவிரமான ரசிகரான அவர் தனது படத்தை அஜீத் ரசிகர்களுக்கான ஒரு படமாக இயக்கி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பாராட்டை பெற்றார். படமும் வசூலை குவித்தது.

இதையடுத்து தனது அடுத்த படம் ஏகே 64 படத்தை இயக்கும் வாய்ப்பை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கே அஜீத்குமார் வழங்கினார். கடந்த ஆண்டு மத்தியில் மே ஜூன் மாதம் இந்த படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்த்த நிலையில் இன்னும் இந்த படம் துவங்குவதற்கான அறிகுறியே இல்லை.

- Advertisement -

ஏனென்றால் நடிகர் அஜீத்குமார் தொடர்ந்து கார் ரேஸ்களில் கடந்தாண்டு முழுவதும் கவனம் செலுத்தினார். ஸ்பெயின் இத்தாலி துபாய் என பல்வேறு நாடுகளில் நடந்த கார் ரேஸ்களில் அவர் கலந்துக்கொண்டார். அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணிக்கு தலைவராகவும் இருந்தார்.

ஏகே 64 படத்தில் நாயகியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் கமிட் செய்யப்பட்டதாகவும் தகவல் வௌியானது. இந்த படம் குட் பேட் அக்லி போல அஜீத் ரசிகர்களுக்கான படமாக மட்டும் இல்லாமல் சகல தரப்பு ரசிகர்களும் விரும்பும் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூறி வந்தார்.

- Advertisement -

ஆனால் இதுவரை ஏகே 64 படம் குறித்த எந்த அறிவிப்பும் தகவலும் இல்லை. எந்த பெரிய நிறுவனமும் இந்த படத்தை தயாரிக்க முன்வரவில்லை. அஜீத்குமார் தரப்பிலும் இந்த படத்தில் நடிக்க பெரிய ஆர்வமும் அக்கறையும் இல்லை என்று தெரிய வருகிறது. இதையடுத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

சமீபத்தில் தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவை சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறார். ஹீரோயிசம் நிறைந்த மசாலா படங்களுக்கு புகழ்பெற்ற பாலகிருஷ்ணாவுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போய் உடனே ஓகே சொல்லியிருக்கிறார். அதனால் இப்போது பாலகிருஷ்ணா படத்தை இயக்க ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளில் ஆதிக் ரவிச்சந்திரன் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

சற்று முன்