- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் 173 படம் ஷூட்டிங் எப்போது? இடையில் அந்த வேலையில் சுறுசுறுப்பாக இறங்கி விட்ட சூப்பர்...

தலைவர் 173 படம் ஷூட்டிங் எப்போது? இடையில் அந்த வேலையில் சுறுசுறுப்பாக இறங்கி விட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1975ம் ஆண்டில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். கடந்தாண்டு தனது சினிமா பயணத்தில் அவரது 50வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடினார். மேலும் கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஜெயிலர் 2 படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிய நிலையில் இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூலித்து, தமிழ் சினிமாவில் 1000 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் என்ற சாதனையை தொடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது 173வது படத்தில் நடிக்க உள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென விலகிய நிலையில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இந்த படத்தில் கமிட் ஆனார்.

ஆனால் இப்போது ஓ மை கடவுளே டிராகன் படங்களை இயக்கிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தான் இந்த படத்தை டைரக்ட் செய்யப் போகிறார் என்பது உறுதியாகி விட்டது. இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. சென்னை பூந்தமல்லியில் உள்ள சுந்தர் ஸ்டுடியோவில் இதற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த தனது வாழ்க்கை வரலாறை அதாவது சுயசரிதையை எழுதி வருகிறார். ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தில் கதை வசனகர்த்தாவாக பணியாற்றிய எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் இந்த சுயசரிதையை ரஜினி சொல்ல சொல்ல எழுதி வருவதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.

ஆனால் இப்போது பிரபல வார இதழ் நிருபர் ஒருவர்தான் ரஜினிகாந்த் தனது வாழ்க்கை சம்பவங்களை சொல்ல சொல்ல அவற்றை சுயசரிதையாக ரஜினியின் மேற்பார்வையில் எழுதி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மிக விரைவில் இந்த சுயசரிதை புத்தகம் வெளியீடு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்