- Advertisement -
Homeபொழுதுபோக்குபடம் மாஸ் ஹிட் என்றால் கார் பரிசு கொடுக்கும் கலாசாரத்தை துவக்கி வைத்தது அந்த மாஸ்...

படம் மாஸ் ஹிட் என்றால் கார் பரிசு கொடுக்கும் கலாசாரத்தை துவக்கி வைத்தது அந்த மாஸ் ஹீரோதான் – சமீபத்தில் சம்பவம் செய்த நடிகர் சூர்யா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் படங்கள் மாஸ் ஹிட் ஆகிவிட்டால் படத்தின் இயக்குனருக்கு விலை உயர்ந்த கார் பரிசளிப்பது சமீபத்தில் அதிகரித்து வருகிறது. ஜெயிலர் படம் மாஸ் ஹிட் ஆன போது சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் படத்தின் ஹீரோ ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு 3 சொகுசு கார்களை பரிசாக வழங்கினார்.

அதே போல் விக்ரம் படம் மாஸ் ஹிட் ஆன போது இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு நடிகர் கமல் கார் ஒன்றை பரிசளித்தார். அதே போல் மாமன்னன் படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு கார் பரிசளித்தார்.

- Advertisement -

அதே போல் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் ஹிட் ஆன போது படத்தின் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. கடந்தாண்டு இறுதியில் வெளியான சிறை படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரிக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

இப்படி தனது படங்கள் வெற்றியடைந்தால் தயாரிப்பாளர் தரப்பிலோ அல்லது ஹீரோ தரப்பிலோ கார் பரிசாக தரப்படுகிறது. இந்த வழக்கத்தை முதலில் ஆரம்பித்து வைத்தவர் நடிகர் அஜீத்குமார் தான். அவர்தான் வாலி படம் ஹிட் ஆன போது இயக்குனர் எஸ்ஜே சூர்யாவுக்கு காரை பரிசளித்தார். பிறகு அமர்க்களம் படம் ஹிட் ஆன போது இயக்குனர் சரணுக்கு கார் பரிசாக வழங்கினார்.

- Advertisement -

இப்படி தனது படங்கள் மாஸ் ஹிட் ஆகி விட்டால் இயக்குனர்களுக்கு கார் பரிசாக தரும் கலாசாரத்தை தமிழ் சினிமாவில் அன்றைக்கு துவங்கி வைத்தவர் இன்றைய கார் ரேஸ் பிரியர் நடிகர் அஜீத்குமார் தான். அவரது இந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. சமீபத்தில் கருப்பு படத்தின் வெற்றிக்காக நடிகர் சூர்யாவும் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று கார்களை பரிசாக தந்திருக்கிறார்.

ஆனால் நடிகர் சூர்யா படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கு கார் பரிசு வழங்கவில்லை. அதற்கு மாற்றாக கருப்பு படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கேமரா மேன் ஜிகே விஷ்ணு மற்றும் எடிட்டர் கலைவாணன் ஆகியோருக்கு விலை உயர்ந்த மகிந்திரா கார்களை பரிசாக வழங்கியிருக்கிறார். முதன்முறையாக எடிட்டர் கேமராமேன் போன்றவர்களுக்கு நடிகர் சூர்யாதான் கார்களை பரிசளித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்