- Advertisement -
Homeபொழுதுபோக்குஅன்றைய காலகட்ட அரசியலால் நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை - இயக்குனர் அமீர் ஆதங்கம்!

அன்றைய காலகட்ட அரசியலால் நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை – இயக்குனர் அமீர் ஆதங்கம்!

- Advertisement -

நடிகர் சூர்யா திரிஷா நடித்த மௌனம் பேசியதே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அமீர். இந்த படம் இன்றும் சிறந்த காதல் படங்களில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அடுத்த இயக்குனர் அமீர் நடிகர் ஜீவா நடிப்பில் ராம் படத்தை இயக்கினார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இயக்குனர் அமீர் இயக்கிய படம்தான் பருத்திவீரன். இந்த படம் கடந்த 2007ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வரவேற்பை வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். முதல்படமே அவருக்கு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

- Advertisement -

இந்த படத்தில் முத்தழகு கேரக்டரில் நடித்த நடிகை பிரியாமணிக்கு சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தில் பொன்வண்ணன் சரவணன் சுஜாதா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் உதவி இயக்குனர்களாக சமுத்திரக்கனி சசிக்குமார் பணியாற்றியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் கார்த்தி இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். ஆனால் இதுவரை அவருக்கு மிகப்பெரிய அடையாளமாக இருப்பது பருத்தி வீரன் படம்தான். இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடும்படியாக படைப்பாக அமைந்தது. ஆனால் இந்த படத்தை இயக்கிய தயாரித்த அமீருக்கு எந்த விருதும் கிடைக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்தது/.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பருத்தி வீரன் படம் குறித்து பேசிய இயக்குனர் அமீர் கூறியதாவது, பருத்திவீரன் படம் எடுத்த சமயத்தில் எப்படியும் அந்த படத்துக்கு விருது கிடைக்கும் என்று நம்பினேன். அப்போது அதை பெற என் அம்மாவை அழைத்துப் போக வேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.

ஆனால் துரதிஷ்டவசமாக அன்றைய காலகட்ட அரசியலால் எனக்கு விருது கிடைக்கவில்லை. அதனால் என் அம்மாவை விருது வாங்க வைக்கும் என்னுடைய ஆசையும் நிறைவேறாமல் போனது என்று இயக்குனர் அமீர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்