- Advertisement -
Homeபொழுதுபோக்குஅன்பில் அவன் படம் எப்படியிருக்கு? அசோக் செல்வன் மறுபடி ஒரு ரவுண்டு வருவாரா? - ஆனா...

அன்பில் அவன் படம் எப்படியிருக்கு? அசோக் செல்வன் மறுபடி ஒரு ரவுண்டு வருவாரா? – ஆனா பிரபல விமர்சகர் படத்தை பத்தி இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

ஒரு படைப்பாளி என்பவன் நல்ல கற்பனை திறன் கொண்டவனாக நிறைய யோசிப்பவனாக இருக்க வேண்டும். வாழ்வியல் சம்பவங்களை கூர்ந்து கவனித்து அதில் உள்ள அனுபவ பாடங்களை கதைக்கருவாக உருவாக்க வேண்டும். ஒரு திரைப்பட இயக்குனர் எப்போதுமே ஒரு சிறந்த கதை சொல்லியாக, கதை திறன் மிக்கவராக இருக்க வேண்டும்.

ஆனால் இப்போதைய இயக்குனர்கள் பலரும், சொந்த சரக்கு இல்லாதவர்களாக இருப்பது தமிழ் சினிமாவுக்கு நேர்ந்த அவலம்தான். மற்ற கதைகளை சுட்டு படமாக்கி ஜெயிப்பதில்தான் அவர்களின் முழு கவனமும் இருக்கிறது. போர்க்களத்துக்கு ஆயுதம் இல்லாமல் சென்றது போது கதையே இல்லாமல் சினிமா எடுக்க வந்துவிடுகின்றனர் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

- Advertisement -

இயக்குனர் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் அன்பில் அவன். நேற்று இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இந்த படம் குறித்து திரை விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, ஹீரோவும் ஹீரோயினும் ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்ப்பார்கள். பிறகு சொந்தமாக தொழில் ஆரம்பிப்பார்கள்.

அதற்காக மலை பிரதேசத்துக்கு சென்று ஒரு வீட்டை வாங்குகிறார்கள். அதை வைத்து குடைச்சல் வருகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் ஹீரோ திருப்பி அடிக்கிறார். அதற்கு பிறகு என்ன ஆனது என்பதுதான் கதை. இதே மாதிரி ஒரு கதை பகத் ஃபாசில் நடித்து மலையாளத்தில் வந்திருந்தது. இவர்கள் ஒரு ஆங்கில படத்திலிருந்து வந்த கதையை தழுவி எடுத்திருக்கிறார்கள். அதை எங்கிருந்து எடுத்தார்கள் என்று தேடிச் செல்ல விரும்பவில்லை.

- Advertisement -

நாம் அடிக்கடி சொல்வதுதான். வந்த கதையை எடுக்கலாம் வந்து நொந்த கதையை எடுக்க கூடாது என்பது மாதிரி மலையாளத்தில் ரீமேக் உரிமம் வாங்காமலேயே எடுத்து இருப்பார்கள். அதில் ஒரு தனித்தன்மை இருக்கும். ஹீரோ எப்படி திருப்பி அடிப்பார் என்று நமக்கே ஆவல் அதிகரிக்கும். இவர்கள் என்னவென்றால் எம்எல்ஏ அரசியல்வாதி ஒரு கதையை எடுத்திருக்கிறார்கள். அந்த எம்எல்ஏவோ இந்த காலத்தில் வந்து ஒரு புலியை தொங்கவிட்டு தோலை உரித்து கொண்டு இருக்கிறார்.

இப்படி எல்லாம் சீனை வைத்து படம் எடுக்கிறார்கள். ஹீரோவை தொடர்ந்து டென்ஷன் படுத்துவார்கள். அவன் பொறுத்து பொறுத்து போவான். ஒரு கட்டத்தில் திருப்பி அடிக்க புறப்படுவது தான் இந்த படத்தின் கதையே. இவர் திருப்பி அடிக்கும்போது நமக்கோ இதானய்யா உங்கள் டக்கு என்று கேட்க தோன்றியது. ஓரளவுக்கு காப்பாற்றக்கூடிய படத்தை கூட இவர்கள் மிஸ் செய்து விட்டார்கள் என்று ப்ளு சட்டை மாறன் அந்த விமர்சனத்தில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்