- Advertisement -
Homeபொழுதுபோக்கு61 வயதில் 47 வயது பெண்ணை 3வது திருமணம் செய்யும் பிரபல பாலிவுட் நடிகர் -...

61 வயதில் 47 வயது பெண்ணை 3வது திருமணம் செய்யும் பிரபல பாலிவுட் நடிகர் – அட இவர் நம்ம தலைவரோட சேர்ந்து நடிச்சவராச்சே?

- Advertisement -

பெரும்பாலான தென்னிந்திய நடிகர்கள் 2 அல்லது 3 திருமணங்கள் செய்தவர்களாக இருக்கின்றனர். அந்த வரிசையில் பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் 5 திருமணங்கள் செய்தவர் என்பது கவனிக்கத்தக்கது. அதே போல் நடிகவேள் எம்ஆர் ராதா பல திருமணங்கள் செய்தவர். நடிகர் கமல் 2 திருமணங்கள் செய்தவர். நடிகர்கள் கே பாக்யராஜ் நாகர்ஜூனா நாக சைதன்யா கார்த்திக் செல்வராகவன் போன்ற சிலரும் 2 திருமணங்கள் செய்தவர்கள்தான்.

இதற்கு காரணம் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் சில சிக்கல்களும் பிரச்னைகளும் அடுத்தடுத்த வாழ்க்கையை தேடிப் போகச் செய்கின்றன. இதற்கிடையே நடிகர்கள் விஜய் ஏஆர் ரகுமான் ஜீவி பிரகாஷ்குமார் தனுஷ் ரவிமோகன் போன்றவர்கள் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் சிலரது விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது.

- Advertisement -

இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவர் அமீர்கான். கடந்த சில ஆண்டுகளாக அவர் படங்களில் அதிகமாக நடிப்பதில்லை. சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் நடிக்க தொடங்கிய நிலையில் கடந்தாண்டு அமீர்கான் நடித்த சித்தாரேசமீன் பர் என்ற படம் வெளியானது.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் அமீர்கான் நடித்திருந்தார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அமீர்கான் சில நிமிடங்கள் மட்டுமே வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு கேரக்டரில் நடித்தது அவசியம்தானா என பலரும் விமர்சித்த நிலையில், ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. காட்சி குறித்து ஆர்வம் காட்டவில்லை என்றும் அதற்கு பதில் தந்திருந்தார்.

- Advertisement -

அதன் பிறகு நடிகர் அமீர்கான் எந்த புது படங்களிலும் நடிக்க கமிட்டாகவில்லை. மாறாக அவர் தனது சொந்த நிறுவனம் தயாரிப்பில் படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 61 வயதாகும் அமீர்கான் ஏற்கனவே 2 திருமணமாகி மனைவிகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் 3வது திருமணம் செய்ய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூருரை சேர்ந்த 47 வயதாகும் கௌரி ஸ்ப்ராட் என்பவரை தான் அமீர்கான் 3வது திருமணம் செய்யப் போகிறார். மிகவும் எளிமையாக அவர்கள் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் அமீர்கான் கௌரி இருவரும் திருமணம் செய்யாமலேயே கடந்த பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். எங்களுக்கு மனதளவில் திருமணம் நடந்து விட்டது போலத்தான் என்று ஏற்கனவே நடிகர் அமீர்கான் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

- Advertisement -

சற்று முன்