கர்நாடகாவில் போலீஸ் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்தவர் அண்ணாமலை. பிறகு அந்த போலீஸ் பணியை வேண்டாம் என்று ராஜினாமா செய்தவிட்டு வெளியேறிய அண்ணாமலை பாஜக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு தமிழக பாஜக தலைவர் என்கிற முக்கிய பொறுப்பை பாஜக தலைமை வழங்கியது.
தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக அண்ணாமலை பாஜக தலைவராக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். பாஜக குறித்த பிரசாரக்கூட்டங்களில் கலந்துக்கொண்டார். பாஜக தேசிய தலைவர்கள் நரேந்திரா மோடி அமித்ஷா நட்டா உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டங்களில் அண்ணாமலை முக்கிய விஐபியாக கலந்துக்கொண்டார். பாஜகவின் தமிழக அடையாளமாக அண்ணாமலை இருந்தார் என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை. மேலும் அவர் ஏற்கனவே பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக உள்ளார். தற்போது பாஜக வை விட்டு வெளியேறிய அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து அண்ணாமலையை விமர்சித்து வரும் காமெடி நடிகர் எஸ்வி சேகர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, நான் இப்போது எந்த கட்சியிலும் இல்லை. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பே நான் பிஜேபியில் இருந்து வெளியே வந்துட்டேன். அதிமுக காங்கிரஸ் பாஜக அவ்வளவுதான் முடிந்து விட்டது. நம்முடைய அரசியல். இனிமேல் அரசியல் வேண்டாம் என்கிற முடிவுக்கும் நாகன் வந்துவிட்டேன்.
ஆனால் திமுக தலைவர் முக ஸ்டாலினின் நல்ல நண்பராக நான் இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. நட்பு என்பது வேறு கொள்கை என்பது வேறு. நான் ஒரு அரசியல் பார்வையாளராக இருந்து என் கருத்துகளை தொடர்ந்து கூறி வருகிறேன். அண்ணாமலை ராஜினாமா எதிர்பார்த்த ஒன்றுதான். அவர் நேர்மையான மனிதரே கிடையாது.
கர்நாடகாவில் போலீஸ் வேலையில் இருந்து அவர் நீக்கப்படும் ஒரு சூழ்நிலை வந்ததால் அவரே ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்தார். பாஜகவை விட்டு அண்ணாமலை விலகியதால் அந்த கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. மோடியை நம்பிதான் அண்ணாமலை வந்தாரே தவிர அண்ணாமலையை நம்பி மோடியும் இல்லை. பாஜகவும் இல்லை என்று நடிகர் எஸ்வி சேகர் கடுமையாக அந்த வீடியோவில் விமர்சித்து பேசியிருக்கிறார்.





