- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் மகன்களை அப்படி நான் வளர்க்கவில்லை, சினிமா எப்படிப்பட்டது என்று எனக்கு தெரியும் - நடிகர்...

என் மகன்களை அப்படி நான் வளர்க்கவில்லை, சினிமா எப்படிப்பட்டது என்று எனக்கு தெரியும் – நடிகர் சிவக்குமார் ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகராக இருப்பவர் சிவக்குமார். ஆரம்பத்தில் பல படங்களில் முருகன் வேடங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் போன்ற ஜாம்பவான் கலைஞர்களுடன் பல படங்களில் நடித்தவர். சினிமாவில் ஒழுக்கம் நிறைந்தவர் என்ற பாராட்டுக்கு உரியவர்.

நடிகர் சிவக்குமாரின் மகன்கள் சூர்யா கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். நடிகர் சூர்யா நடிப்பில் ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. கார்த்தி இப்போது சர்தார் 2 படத்தில் நடித்துவரும் நிலையில், அடுத்து கைதி 2 படத்தில் நடிக்க உள்ளார். மிக விரைவில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்திலும் கார்த்தி நடிப்பது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சிவக்குமார் தனது மகன்கள் சூர்யா கார்த்தி குறித்து பேசியதாவது, நடிகர் நடிகரான பிறகும் கையில் பிரஷ் வைத்திருக்க காரணம், சினிமாவில் தோற்றுப் போனால் கூட ஓவியராக வாழ்க்கை நடத்தி விடலாம் என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். ஏனென்றால் சினிமாவில் வெற்றி நிலை இல்லாதது.

பத்து நடிகர்களின் வாரிசுகள் சினிமாவுக்குள் வந்தாலும் அதில் ஒருவர் ஜெயிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் அப்படி வாரிசு நடிகராக நடிகையாக வந்து சினிமாவில் தோற்றுப் போனவர்களே அதிகம். அதனால் எனது மகன்களை நடிகர்களாகும் எண்ணத்தில் நான் வளர்க்கவில்லை.

- Advertisement -

எனது மகன் சூர்யாவுக்கு நடிப்பில் ஆர்வமே கிடையாது. யாராவது நடிக்கிறீர்களா என கேட்டால், என் அப்பா நடிகர் என்பதால் நானும் நடிக்க வேண்டுமா என்றுதான் அப்போது கேட்பார். ஆனால் சினிமாவில் நடிக்குமாறு கேட்ட போது, சினிமாவில் நடித்தால் பெயர் கெட்டுவிடும் என்றுதான் சூர்யா முதலில் மறுத்தார்.

ஆனால் சூர்யாவிடம், சினிமாவில் இருந்துக்கொண்டு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத உங்கள் அப்பாவே உங்கள் வீட்டில் ஒரு உதாரணமாக இருக்கிறார். சினிமாவில் ஒழுக்கத்தில் உயர்ந்த குருநாதராக அவரை நாங்கள் மதிக்கிறோம். உங்கள் வீட்டிலேயே அப்படி ஒரு சிறந்த மனிதர் இருக்கும்போது சினிமாவில் நீங்கள் நடிக்க மறுக்கலாமா என்று சொன்னதால்தான், சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டார் என, நடிகர் சிவக்குமார் அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்