- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள சினிமாவை மிஞ்சியதா தமிழ் சினிமா? தினமும் குவியுது பாலியல் புகார்கள், உண்மையை ஒத்துக்கொண்ட நடிகை...

மலையாள சினிமாவை மிஞ்சியதா தமிழ் சினிமா? தினமும் குவியுது பாலியல் புகார்கள், உண்மையை ஒத்துக்கொண்ட நடிகை ரோகிணி – ஆனால் புகார் விவரங்களை வெளியிட மறுக்கிறார்களே?

- Advertisement -

கேரளா சினிமாவில் நடிகைகளுக்கு சில இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கொடுத்த பாலியல் தொல்லை குறித்த புகார்கள் கடந்த சில மாதங்களாக மலையாள சினிமா உலகில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகைகள் சிலர் படப்பிடிப்பு தளங்களிலும் தனிப்பட்ட முறையிலும் சில நடிகர்கள் சில இயக்குனர்கள் தங்களுக்கு தந்த பாலியல் துன்புறுத்தல்கள் பாலியல் அழுத்தங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் புகார் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தவிர ஹேமா கமிட்டி மூலம் விசாரணை அறிக்கை வெளியிட்ட வகையில், பல திடுக்கிடும் தகவல்கள் அதில் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக நடிகைகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து நடிகைகள் குஷ்பூ ஊர்வசி நளினி ராதிகா சமந்தா போன்றவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையிலும் பெண்களுக்கான பாலியல் குற்றங்கள் குறித்து பாதுகாப்பு கமிட்டி அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் நடிகை ரோகினி தலைவர் பொறுப்பு வகிக்கும் பெண்கள் பாதுகாப்பு கமிட்டி தமிழ் சினிமா துறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 2019 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டுப்பாட்டில் நேரடி பார்வையில் செயல்படும் இந்த கமிட்டியின் தலைவராக நடிகை ரோகினி, கமிட்டியில் உறுப்பினர்களாக குஷ்பூ சுகாசினி போன்ற நடிகைகளும் உள்ளனர். இதில் மனநல ஆலோசகர்களும், வழக்கறிஞர்களும் உறுப்பினர்களாக இருப்பதால் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய நடிகை ரோகினி, தமிழ் சினிமா துறையில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு குறித்து புகார் தரலாம். அப்படி கொடுக்கப்படும் புகார்கள் குறித்து ரகசியம் காக்கப்படும். அவர்கள் இமெயில் மூலமாகவும், போன் மூலமாகவும் புகார்களை அளிக்கலாம். இந்த குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உறுதி செய்யப்படும் பட்சத்தில் ஐந்து ஆண்டுகள் வரை அவர்கள் சினிமாவில் நடிக்கவும் பணியாற்றவும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற தகவல்களை தெரிவித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ரோகிணி இது பற்றி கேட்டபோது, பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் குழுவில் புகார் அளித்து வருகின்றனர் .இது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். புகார் கொடுத்தவர்கள் விவரங்களை வெளியே சொல்ல முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டோர் தாராளமாக புகார் செய்யலாம் என்று அவர் கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பாலியல் புகார் குவிவது, சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்