- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் இனிய தமிழ் மக்களே - ரசிகர்களின் மனங்களில் ஒலித்த கணீர் குரல் மறைந்தது, ...

என் இனிய தமிழ் மக்களே – ரசிகர்களின் மனங்களில் ஒலித்த கணீர் குரல் மறைந்தது, 84 வயதில் இயற்கை எய்தினார் இயக்குனர் பாரதிராஜா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை இயக்கி இயக்குனர் இமயம் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் பாரதிராஜா. உடல் நலக்குறைவால் நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த அவர் இன்று காலை காலமானார். பாரதிராஜாவுக்கு வயது 84. அவரது மறைவு தமிழ் சினிமா சினிமாத்துறையினரையும் ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 1977ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அவரது வருகைக்குப் பிறகு தமிழ் சினிமா புதியதொரு கோணத்தில் மாறியது. தமிழ் சினிமாவின் வழக்கமான இலக்கணத்தை மாற்றி எழுதியவர் பாரதிராஜா என்றால் அது மிகையல்ல. ஸ்டுடியோக்குள் முடங்கி கிடந்த கேமராவை கிராமத்து வயல்வெளிகளுக்கு எடுத்துச் சென்று திரையில் மண்வாசனையை கொண்டு வந்து சேர்த்தவர் பாரதிராஜா.

- Advertisement -

கிழக்கே போகும் ரயில் சிகப்பு ரோஜாக்கள் அலைகள் ஓய்வதில்லை முதல் மரியாதை கடலோர கவிதைகள் கருத்தம்மா என அவர் இயக்கிய படங்கள் தமிழ் சினிமாவின் மைல்கல்களாக இருந்தன. என் இனிய தமிழ் மக்களே என்ற அவரது குரல் ரசிகர்கள் மத்தியில் காந்தமாக ஒலித்தது. கிராம மக்களின் வாழ்வியல் யதார்த்தங்களை அவரது படங்கள் பேசியது.

இயக்குனர் பாரதிராஜாவின் சிறந்த படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு இயக்குனர் பாரதிராஜாவை கவுரவித்தது. இது தவிர பல தேசிய விருதுகளையும் மாநில அரசின் விருதுகளையும் இயக்குனர் பாரதிராஜா பெற்றுள்ளார். விருதுகளுக்கு பெருமை சேர்ந்த உன்னத கலைஞர்களில் பாரதிராஜாவும் ஒருவர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது வலம் வரும் பல முன்னணி நடிகர்களையும் நட்சத்திர இயக்குனர்களையும் அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்கு உண்டு. தமிழ் சினிமாவில் கே பாக்யராஜ் மணிவண்ணன் மனோபாலா உள்ளிட்ட பலரும் பாரதிராஜாவின் சிஷ்யர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக படங்களை இயக்காத போதிலும் படங்களில் பாரதிராஜா அவ்வப்போது நடித்து வந்தார்.

திருச்சிற்றம்பலம் நம்ம வீட்டு பிள்ளை திரு மாணிக்கம் போன்ற சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் பாரதிராஜா நடிப்பில் தனது தனி முத்திரையை பதித்தார். அவரது மகன் நடிகர் மனோஜ் மறைவுக்கு பிறகு மிகவும் தளர்ந்து போனார். பல மாதங்களாக கடும் உடல் நலக்குறைவால் முதுமையால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமாத்துறையினரையும் ரசிகர்களையும் பலத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்