- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவை பெருமைப்படுத்திய இயக்குனர் இமயம் பாரதிராஜா - அவரது புகழ் சிறக்க முதல்வர் விஜய்...

தமிழ் சினிமாவை பெருமைப்படுத்திய இயக்குனர் இமயம் பாரதிராஜா – அவரது புகழ் சிறக்க முதல்வர் விஜய் அந்த 3 விஷயங்களை செய்வாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பாரதிராஜா. கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த பாரதிராஜா, நேற்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84. அவரது உடல் இன்று தேனி மாவட்டத்தில் அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

16 வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. பிறகு கிழக்கே போகும் ரயில் அலைகள் ஓய்வதில்லை கல்லுக்குள் ஈரம் கடலோர கவிதைகள் கிழக்கு சீமையிலே முதல் மரியாதை என அவரது இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படமும் ஒரு திரைக்காவியமாக இருந்தது. ரசிகர்களின் மனங்களில் அந்த படங்கள் நிலைத்தன.

- Advertisement -

தமிழ் சினிமாவை புழுதி படர்ந்த கிராமங்களுக்கு கொண்டு சென்று அங்கு வாழும் யதார்த்த மனிதர்களின் வாழ்க்கையை தன் கேமராவில் சிறை பிடித்து பொதுவெளிக்கு கொண்டு வந்த கலை வித்தகர் பாரதிராஜா. தமிழ் சினிமாவின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டு தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு சென்ற படைப்பாளி பாரதிராஜா தான் என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் 84 வயதில் உடல் மூப்பு மற்றும் உடல் நல பாதிப்புகளால் அவரது மறைவு என்றாலும் ரசிகர்களால் அதை ஏற்க முடியவில்லை. ஒரு திரைக் கலைஞனாக படைப்பாளியாக அவரது சாதனைகளும் வெற்றிகளும் இன்னும் நூறாண்டு காலம் கடந்தும் நின்று பேசும். அவரது கதைகள் இன்னும் பல காலம் அவரது பெயரை சொல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

பாரதிராஜா மறைந்த நிலையில் அவரது சினிமா புகழை காலத்துக்கும் சொல்லும் விதமாக அவரை பெருமைப்படுத்தும் விதமாக தமிழ் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் சார்பில் தமிழக அரசுக்கு 3 முக்கியமான கோரிக்கைகள் எழுந்துள்ளன. சினிமா துறையில் இருந்து அரசியலுக்குள் வந்து முதல்வராக உள்ள விஜய் இதை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு சென்னையில் ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் அவரது உருவச்சிலையை நிறுவ வேண்டும். அதே போல் சென்னையில் உள்ள ஏதேனும் ஒரு முக்கியமான சாலைக்கு பாரதிராஜா பெயர் வைக்கப்பட வேண்டும். மேலும் ஆண்டுதோறும் வழங்கப்படும் அரசு சினிமா விருதுகளில் ஒன்றை பாரதிராஜா விருது என்று அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்