- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னுடன் நடிக்க பல நடிகைகள் மறுத்துவிட்டனர், அந்த நடிகையுடன் நடிக்க நானே ஆசைப்பட்டேன் - சின்ன...

என்னுடன் நடிக்க பல நடிகைகள் மறுத்துவிட்டனர், அந்த நடிகையுடன் நடிக்க நானே ஆசைப்பட்டேன் – சின்ன சின்ன ஆசை பட விழாவில் ஓபனாக பேசிய நடிகர் இந்திரன்ஸ்!

- Advertisement -

மலையாள நடிகர் இந்திரன்ஸ் மலையாளத்தில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு படத்தில் முக்கிய கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அடையாளத்தை பெற்று தந்துள்ளது. இப்போது சின்ன சின்ன ஆசை என்ற படத்தில் நடிகர் இந்திரன்ஸ் நடிகை மதுபாலாவுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இந்த படம் வருகிற 19ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் இந்திரன்ஸ் பேசியதாவது, பல சினிமா வாய்ப்புகள் வந்தாலும் சில உயிர்ப்புள்ள கதாபாத்திரங்கள் கிடைக்கும்போது எனக்குள் ஒரு தயக்கம் இருக்கும். அத்தகைய ஒரு படம் தான் சின்ன சின்ன ஆசை. இந்த படத்துக்கான கதையைக் கேட்டவுடன் நான் சரி என்று நடிக்க ஒப்புகொண்டு விட்டேன்.

- Advertisement -

நடிகை மதுபாலா தான் கதாநாயகி என்று என்னிடம் சொன்னார்கள். இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பது யார் என்று கேட்டால் என் பெயரை சொல்லி விடாதீர்கள். இன்னும் முடிவு செய்யவில்லை என்று சொல்லுங்கள் என தயாரிப்பாளர்களிடம் கூற சொல்ல வேண்டும் என்றுதான் நான் நினைத்தேன். ஏனென்றால் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவர் என்று தெரிந்தால் அவர்கள் என்னுடன் நடிக்க தயக்கம் காட்டலாம்.

ஒருவேளை நடிக்க விருப்பம் இருந்தாலும் வர மாட்டார்கள். பல படங்களில் எனக்கு இது போல் நடந்துள்ளது. என்னுடன் நடிக்க உள்ளவர்கள் என்று பெரிய நடிகைகளின் பெயர்கள் சொல்லப்படும். ஆனால் இறுதியில் அவர்கள் படத்தில் நடிக்க வரமாட்டார்கள். எனது முந்தைய வேடங்களையும் தோற்றங்களையும் கண்டு பல நடிகைகள் என்னுடன் நடிக்க தயங்கியுள்ளனர். அதனால்தான் மதுபாலா இந்த படத்தில் நடிக்க வருவாரா என்பது சந்தேகம் இருந்தது.

- Advertisement -

கதை பிடித்து மதுபாலா நடிக்க வர சம்மதித்ததால் எனக்கு அந்த கவலை நீங்கியது. ஜூன் 19ம் தேதி படம் திரையரங்குக்கு வரும்போது ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று படபடப்புடன் காத்திருக்கிறேன். எனது ஆரம்ப கால வாழ்க்கையில் நல்ல கதாநாயகிகளுடன் நடிக்க வேண்டும் என்பது பெரிய ஆசையாக இருந்தது. அப்போது ஹேமாமாலினியுடன் நடிக்க வேண்டும் என மனதில் வைத்திருந்தேன். அது நடக்கவில்லை.

ஆனால் அதே குடும்பத்தைச் சேர்ந்த மதுபாலாவை நாயகியாக இந்த படத்தில் பெற்றதில் மகிழ்ச்சி. தலைமுறை மாறிய போதும் நான் அவர்களுக்கு ஏற்ற ஒரு மனிதனாக மாறிவிட்டேன். ஒதுங்கி விடாமல் தொடர்ந்து பயணித்ததால் தான் இந்த இடத்திற்கு வர முடிந்தது. இது புதிய தலைமுறை எனக்கு அளித்த பரிசு என்று நடிகர் இந்திரன்ஸ் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்