- Advertisement -
Homeபொழுதுபோக்குசோலார் மகேந்திரனை டிஸ்சார்ஜ் பண்ணு, வாலியண்ட்ரா வந்த ஸ்ரீமனை அட்மிட் பண்ணு - தளபதிக்கு ஆதரவா...

சோலார் மகேந்திரனை டிஸ்சார்ஜ் பண்ணு, வாலியண்ட்ரா வந்த ஸ்ரீமனை அட்மிட் பண்ணு – தளபதிக்கு ஆதரவா பேசுன மனுஷனை இந்த பொள பொளக்கறாங்களே?

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடந்து வருகிறது. அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற இந்த 37 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 150க்கும் மேற்பட்ட பாலியல் கொடுமைகள் நடந்து அதுகுறித்த போலீஸ் புகார்கள் பதிவாகியுள்ளதாக சமீபத்தில் ஒரு கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

மேலும் தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக பலரும் பேசத் துவங்கி விட்டனர். குறிப்பாக தமிழக சட்டசபையில் எதிர்கட்சி எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அவர் பதில் தராமல் மற்ற அமைச்சர்கள் பதில் தருவதும் அவர் உம்மென்ற முகத்துடன் எப்போதும் கப்பல் கவிழ்ந்தவர் போல இருக்கிறார் என்றும் பலர் விமர்சிக்க துவங்கி விட்டனர். மேலும் விஜய் முதல்வரான பிறகும் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கும் பாதுகாப்பில்லை என்ற விமர்சனங்கள் பரவலாக எழுந்து வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் சென்னையில் பல பகுதிகளில் மின்தடை பிரச்னையும் மக்களை வெறுப்படைய செய்துள்ளது. நாள் முழுவதும் இரவில் கூட மின்சாரம் இல்லாமல் சென்னை மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு பேசிய நடிகர் மாஸ்டர் மகேந்திரன், கரண்ட் இல்லேன்னு கேட்டா வந்துடுமா, சோலார் சிஸ்டம் எதுக்கு இருக்குது. என் வீட்ல இருந்து வேணா கரண்ட் எடுத்துக்குங்க என்று அலட்சியமாக பேசியிருந்தார்.

அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சையான நிலையில் அவரை இணையத்தில் மக்கள் வறுத்து எடுத்தனர். பிறகு அவர் மன்னிப்பு கேட்ட நிலையில் இப்போது நடிகர் ஸ்ரீமன் முதல்வர் விஜய்க்கு ஆதரவாக பேசியதால், மாஸ்டர் மகேந்திரனை டிஸ்சார்ஜ் பண்ணு, ஸ்ரீமனை அட்மிட் பண்ணு என்று கேப்ஷன் போட்டு ஸ்ரீமனை நெட்டிசன்கள் விளாசத் துவங்கியிருக்கின்றனர்.

- Advertisement -

பல படங்களில் விஜயுடன் நடித்தவர் ஸ்ரீமன். விஜயின் நண்பர் என்பதால் அவர் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஸ்ரீமன், இத்தனை கோடி மக்களில் எங்கேயோ ஒரு மூலையில் சில தப்புகள் நடக்கிறது. 2 பேர் 4 பேர் தப்பு செய்கின்றனர். அதற்காக அந்த சின்ன விஷயத்தை பூதாகரமாக மாற்றி பெரிதுபடுத்துகின்றனர்.

இப்படி செய்யவே சிலர் காத்திருந்து அதை செய்கின்றனர். பெட்ரோல் பங்கில் பெட்ரோல் இல்லை என்றால் கூட அதற்கு விஜய்தான் காரணம் என்பார்களா? என்று நடிகர் ஸ்ரீமன் பேசியிருக்கிறார். ஸ்கிரிப்ட் ஸ்பீக்கர் விஜய் முதல்வராக இருந்துக்கொண்டு சட்டசபையில் வாயை திறப்பதில்லை. பஸ் மீது ஏறினால் தான் அவருக்கு பேச்சு வருமா என்று விமர்சித்து வந்த ரசிகர்கள், வாலியண்டராக வந்து விஜய்க்கு ஆதரவாக பேசிய ஸ்ரீமனை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்