- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வர் விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்புகள், இதுபோன்ற குட்டி கதையும் சைகைகளும் மாண்புக்குரியது அல்ல - விமர்சிக்கும்...

முதல்வர் விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்புகள், இதுபோன்ற குட்டி கதையும் சைகைகளும் மாண்புக்குரியது அல்ல – விமர்சிக்கும் அரசியல் தலைவர்கள்!

- Advertisement -

தமிழக முதல்வர் விஜய் நேற்று முன்தினம் நடந்த சட்டசபை நிறைவு நாளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். அவரது பதிலுரையின் போது கடந்த கால திமுக ஆட்சியில் நடந்த தவறுகள் குறைகள் ஊழல்கள் குறித்தும் விஜய் விமர்சித்து பேசினார்.

அப்போது டாஸ்மாக் கடைகளில் பார்ட்டி பண்ட் என்ற பெயரில் கட்சி நிதி வசூலித்ததாகவும் நடந்த ஊழலை எல்லாம் வெளியே கொண்டு வருவோம். ஒவ்வொரு துறை ஊழலாக வெளியே வரப்போகிறது. அப்போது சம்பந்தப்பட்வர்கள் எல்லாம் பயந்து நடுங்க போகிறார்கள் என்றும் விஜய் பேசினார்.

- Advertisement -

இதற்கு எதிர்கட்சி தரப்பில் திமுக சட்டசபை தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய் குட்டிக்கதை என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கேலி செய்யும் விதமாக பேசினார்.

குறிப்பாக உங்க அப்பாவை எங்கே காணோம் என்று தேடுவது போல் நடித்தும் காட்டிய முதல்வர் விஜய், அவரது பேச்சை முடிக்கும் போதே கழுத்துக்கு கீழே கையை வைத்து எல்லாம் முடிந்தது என்பது போல சைகை செய்தார். அவரது இந்த குட்டிக்கதை சைகை போன்றவை சட்டசபையில் இருந்த அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஆனால் முதல்வர் விஜயின் இந்த குட்டிகதை மற்றும் சைகைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். சபை மாண்பை மீறி முதல்வர் விஜய் இப்படி நடந்துக்கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறியிருக்கின்றனர்.

அதே போல் இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவியின் கதை எல்லாருக்குமே தெரியும் என்றும் கூறியிருந்தார். இதுவும் சரியான பதில் அல்ல. இப்படி குடும்பம் சார்ந்தும் தனிமனிதர்கள் சார்ந்தும் தரம் இல்லாத விமர்சிப்பது தவறு என்றும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்