- Advertisement -
Homeபொழுதுபோக்குபோனில் கோபத்தை வெளிப்படுத்திய இயக்குனர், சரியான பதிலடி கொடுத்த நடிகர் விஷ்ணு விஷால் - என்ன...

போனில் கோபத்தை வெளிப்படுத்திய இயக்குனர், சரியான பதிலடி கொடுத்த நடிகர் விஷ்ணு விஷால் – என்ன நடந்தது தெரியுமா?

- Advertisement -

நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய இந்த படத்தில் கபடி விளையாட்டு வீரராக அவர் நடித்திருந்தார். முதல் படமே அவருக்கு நல்ல அடையாளத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. நடிகர் சூரிக்கு பரோட்டா காமெடி நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் குள்ளநரிக்கூட்டம் நீர்ப்பறவை சிலுக்குவார்பட்டி சிங்கம் முண்டாசுப்படி ராட்சசன் இன்று நேற்று நாளை வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்பு விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் வருகிற ஜூலை 3ம் தேதி கட்டாகுஸ்தி 2ம் பாகம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து விஷால் விஷ்ணு ஆர்வமாக பங்கேற்று வருகிறார்.

மேலும் அவருக்கு ஆட்டோ இம்யூனோ என்ற நோய் பாதிப்பு 34 ஆண்டுகளாக இருப்பதாகவும் சமீபத்தில் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோய்க்கான மருந்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் தான் சோர்வு இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால் இயக்குனருடன் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது, எனக்கு ஒரு டைரக்டர் போன் செய்தார். போனை எடுத்ததுமே ஹலோ என்று ரொம்பவும் திமிராக சொல்லிவிட்டு நீங்க என்ன ரஜினியா? கமலா? சூர்யாவா? இரண்டு முறை போன் செய்தும் ஏன் எடுக்கவில்லை? என்று என்னை கேட்டு விட்டார். எனக்கு சுர்ர்ர் என்று கோபம் ஏறிவிட்டது.

உடனே நானும் கோபமாக பேசிவிட்டேன். சார் நீங்கள் என்ன மணிரத்னம் சாரா? ஷங்கர் சாரா? இல்லை கௌதம் மேனனா? நான் ஏன் நீங்கள் கால் செய்தால் உங்கள் போனை உடனே எடுக்க வேண்டும் என்று பதிலுக்கு கேட்டு விட்டேன். என்னிடம் அப்படி நடந்துக்கொண்டால் என்னுடைய பதிலும் அப்படிதான் இருக்கும் என்று நடிகர் விஷ்ணு விஷால் அப்போது கூறியிருக்கிறார். ஆனால் அந்த இயக்குனர் பெயரை அவர் சொல்லவில்லை.

- Advertisement -

சற்று முன்