- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரை விட பெரிய நாயகியாக பாலிவுட்டில் ஜெயிப்பேன், அதிக சம்பளம் வாங்க போட்டி போடும் நேஷனல்...

அவரை விட பெரிய நாயகியாக பாலிவுட்டில் ஜெயிப்பேன், அதிக சம்பளம் வாங்க போட்டி போடும் நேஷனல் கிரஷ் நடிகை – நயன்தாராவும் களத்தில் இருக்கிறாரா?

- Advertisement -

பொதுவாகவே பெண்களுக்குள் போட்டி பொறாமை என்பது அதிகமாக இருக்கும் என்று உளவியல் சான்றுகள் கூறுகின்றன. பள்ளிகள் கல்லூரிகள் அலுவலகங்கள் வீடுகள் என எல்லா இடங்களிலும் பெண்களுக்குள் இப்படி ஒரு ஈகோ காணப்படுவதும் உண்மைதான். 100 ஆண்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக வேலை செய்யும் இடங்களில் 2 பெண்கள் இருந்தால் கூட அவர்களுக்குள் மோதல் இருக்கவே செய்கிறது.

அந்த போட்டியும் பொறாமையும் சினிமா துறையிலும் உள்ள நடிகைகளுக்கு இடையே காணப்படுவது இயல்புதான். ஒரு நடிகை முன்னணியில் இருந்தால் அவரது இடத்தை பிடிக்க வேண்டும் என்ற மற்ற நடிகை போட்டியாளராக கருதுவதில் தவறில்லை. ஆனால் போட்டி பொறாமையாக மாறும் பட்சத்தில் அது விவகாரங்களை ஏற்படுத்தி விடுகிறது.

- Advertisement -

பெரும்பாலும் திருமணத்திற்கு பின்பு பல கதாநாயகிகள் சினிமாவில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விடுகின்றனர். பிறகு பல ஆண்டுகள் கழித்து அக்கா அண்ணி அம்மா கேரக்டரில் நடிக்க வருகின்றனர். ஏனெனில் உடல் பருமனும் முகத்தில் ஏற்படும் மாற்றங்களும் அவர்களை நடுத்தர வயது பெண்மணிகளாக காட்டுகின்றன.

ஆனால் இப்போது திருமணத்துக்கு பிறகும் ஹீரோயின்களாக நடித்துவரும் நயன்தாரா கீர்த்தி சுரேஷ் ராஷ்மிகா மந்தனா சமந்தா போன்றவர்கள் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகின்றனர். ஏனெனில் அவர்களது இளமை அப்படியே இருக்கிறது. அந்த வகையில் திரை பயணத்தை அவர்கள் திருமணத்துக்கு பிறகும் வழக்கம் போல தொடர்கின்றனர்.

- Advertisement -

நடிகை நயன்தாரா தற்போது இந்தி நடிகர் சல்மான்கானுடன் நடிக்கும் இந்தி படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளார். இந்த நிலையில் அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா அவர் நடிக்கப் போகும் புதிய படத்துக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருக்கிறார்.

இந்த படம் பெரிய ஹிட் ஆகி விட்டால் இந்திய நடிகை தீபிகா படுகோனாவை டார்கெட்டாக வைத்து அடுத்தடுத்து தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தவும் ராஷ்மிகா மந்தனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் இந்தியில் பெரிய சம்பளம் வாங்கும் நடிகையாக தீபிகா படுகோனே இருந்து வருகிறார். அவரை ராஷ்மிகா மந்தனா ஓவர்டேக் செய்யும் பட்சத்தில், நேஷனல் கிரஷ் நடிகையை நயன்தாராவும் முந்த முயற்சிப்பார் என்று தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்