- Advertisement -
Homeபொழுதுபோக்கு1.5 கோடி ரூபாய் சம்பளம் எதிர்பார்த்த நடிகர் கமல்ஹாசன், ஆனால் கிடைத்தது 5 கோடி ரூபாய்...

1.5 கோடி ரூபாய் சம்பளம் எதிர்பார்த்த நடிகர் கமல்ஹாசன், ஆனால் கிடைத்தது 5 கோடி ரூபாய் – அப்படி வாரி வழங்கிய படம் எது தெரியுமா?

- Advertisement -

இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட் ஆகி விட்டாலே அந்த நடிகர் அறிமுக கதாநாயகனாக இருந்தாலும் அடுத்த தனது 2 படத்தில் தனது சம்பளத்தை 5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை உயர்த்தி விடுகிறார். இதுவரை 3 படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்துள்ள நடிகர் சூரியே ரூ. 25 கோடி சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் திரையுலக ஜாம்பவான்களாக இருந்த நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்றவர்களே கடந்த 1990களின் இறுதி வரை லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தனர் என்றால் அது மிகையல்ல. நீங்கள் நடிக்கும் அடுத்த படத்தில் 1 கோடி ரூபாய் சம்பளம் கேளுங்கள் என்று ரஜினிக்கு அட்வைஸ் தந்து ஐடியா கொடுத்தவரே நடிகர் கமல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் எப்போதுமே வித்தியாசமான கெட்டப்களிலும் கேரக்டர்களிலும் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். அந்த வகையில் 16 வயதினிலே படத்தில் சப்பாணியாகவும் அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள அப்புவாகவும் இந்தியன் படத்தில் தாத்தாவாகவும் அவ்வை சண்முகி படத்தில் மாமியாகவும் நடித்து அசத்தியிருந்தார்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் மீனா ஜெமினி கணேசன் நாசர் மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்த அவ்வை சண்முகி படத்தை தயாரிப்பாளர் எச் முரளி தயாரித்து இருந்தார். அவர் பில்லா மெர்சல் ஆகிய படங்களுக்கும் இணை தயாரிப்பாளராகவும் இருந்தவர். தயாரிப்பாளர் எச் முரளி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய போது கூறியதாவது, கடந்த 1996ம் ஆண்டில் இந்தியன் படம் தயாரிப்பில் இருந்தபோது அவ்வை சண்முகி படத்தை கமல்ஹாசனை வைத்து தயாரிக்க ஒப்பந்தம் செய்தேன்.

- Advertisement -

அப்போது கமல் சார் என்னிடம், இந்தியன் படத்திற்காக எனக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளமாக தந்துள்ளனர். நீங்களும் அதே போல் 1.5 கோடி ரூபாய் சம்பளமாக தர முடியுமா? அல்லது நான்கு ஏரியாக்களின் வினியோகம் உரிமையை எனக்கு தர முடியுமா என்று கேட்டார். நான் சென்னை சிட்டி கேரளா கர்நாடகா ஓவர்சீஸ் என நான்கு ஏரியா விநியோக உரிமையை கமல் சாருக்கு தந்தேன்.

அவ்வை சண்முகி படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிறகு அந்த நான்கு ஏரியாக்களில் இருந்து கமல் சாருக்கு 5 கோடி ரூபாய் ஷேர் ஆக கிடைத்தது. அவ்வை சண்முகி படத்தை பொருத்தவரை கமல் சாரின் சம்பளம் 5 கோடி ரூபாயாக இருந்தது என்று ஒரு முக்கிய தகவலை தயாரிப்பாளர் எச் முரளி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்