- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் தான் ஒரு பொய்காரன் என்பதை அவரே வெளிப்படுத்துகிறார், மக்களின் அறிவுக் கண் திறக்கலையே? -...

விஜய் தான் ஒரு பொய்காரன் என்பதை அவரே வெளிப்படுத்துகிறார், மக்களின் அறிவுக் கண் திறக்கலையே? – ஆதங்கமாக பேசிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக நடிகராக இருந்து பிறகு அரசியல் கட்சி துவங்கி 2 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி துவங்கியது முதல் அவர் பலவிதமான விமர்சனங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். தமிழக முதல்வரான பிறகும் அந்த விமர்சனங்கள் தொடரவே செய்கிறது.

குறிப்பாக விஜய் அரசியல் களத்தில் இருந்த போது பனையூர் பண்ணையார் என்று விமர்சிக்கப்பட்டார். கரூர் சம்பவம் அவருக்கு மிகப்பெரிய கண்டனத்தை ஏற்படுத்தியது. திமுக மீது ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினாலும் அந்த கூட்டத்துக்கு 7 மணி நேரம் விஜய் தாமதமாக வந்ததும் முக்கிய தவறாக விமர்சனம் எழுந்தது.

- Advertisement -

அத்துடன் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து அவர் துக்கம் விசாரித்ததும் பேசுபொருளாக மாறியது. மேலும் அந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இப்போது அரசு பணி வாய்ப்பு அளித்ததும் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகனை பார்க்க வந்து நெரிசலில் சிக்கி உயிரிழந்தால் அரசாங்க வேலையா? என்றும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தமிழக முதல்வரான பிறகும் விஜய் தொடர்ந்து திமுக குறித்தும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் விமர்சித்து வருகிறார். மேடைகளில் தமிழகத்தின் முதல்வர் என்கிற ஒரு தலைமை பதவியில் இருந்தும் அவர் அநாகரிகமான முறையில் வார்த்தைகளை பயன்படுத்துவதும் பெரிய அளவில் சர்ச்சையாக உள்ளது. தொடர்ந்து அவர் செய்து வருவது வெறுப்பு அரசியல் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

- Advertisement -

அத்துடன் தனது ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பணியை வழங்கிய முதல்வர் விஜய், பிறகு மக்கள் தரப்பிலும் பிற அரசியல் கட்சிகள் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதால் ஒரே நாளில் அந்த உத்தரவை வாபஸ் பெற்றார். மேலும் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்கியிருப்பதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது, விஜய் தான் ஒரு பொய்காரன் என்பதை பல விதங்களில் மக்களுக்கு காமிச்சிகிட்டே இருக்கிறார். மக்களின் அறிவு கண்தான் இன்னும் திறக்கவில்லை. பாவம் அந்த குருட்டு ரசிகர்கள். விரைவில் அது நடக்கும். நான்தான் சொன்னேனே? பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்