- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் 24ம் தேதி திரைக்கு வரும் ஜனநாயகன், எதிர்பார்த்த வசூலை குவிக்குமா? மீண்டும் நான்தான் தமிழ்...

வரும் 24ம் தேதி திரைக்கு வரும் ஜனநாயகன், எதிர்பார்த்த வசூலை குவிக்குமா? மீண்டும் நான்தான் தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என தளபதி நிரூபித்து காட்டுவாரா?

- Advertisement -

கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வேண்டிய ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனையால் 6 மாதங்களாக ரிலீஸ் தடைப்பட்டது. இப்போது ஜனநாயகன் படம் வருகிற 24ம் தேதி வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அன்று ஜனநாயகன் படத்தை வரவேற்க பெரிய அளவிலான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தமிழகத்தில் மட்டும் 750க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஜனநாயகன் படம் வெளியாகிறது. உலகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைகளில் இந்த படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. பொதுவாக விஜய் நடித்த படங்களை குழந்தைகளும் பெண்களும்தான் பெரிய அளவில் பார்க்க வருவார்கள். கொண்டாடுவார்கள். அதனால் தியேட்டர்களுக்கு குடும்பம் குடும்பமாக ஏராளமான மக்கள் வருவார்கள்.

- Advertisement -

ஆனால் ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் அதை யு/ஏ ஆக மாற்ற வாய்ப்பு இருக்கிறதா அல்லது வேறு வகையில் சான்றிதழ் வாங்க வாய்ப்புள்ளதா என்று படக்குழு ஆலோசித்து வருகிறது. அதேசமயம் இதற்காக தாமதம் ஆகிவிட்டால் படம் ரிலீஸ் ஆவது ரிஸ்க் என்றும் படக்குழுவினர் நினைக்கிறார்கள்.

தமிழக முதல்வர் ஆன பிறகு நடிகர் விஜயின் கடைசி படம் இது என்பதால் ஜனநாயகன் படம் பல வகைகளில் சாதனை படைக்க வேண்டும். குறிப்பாக வசூலில் புது ரெக்கார்டு செய்ய வேண்டும். இதுவரை இல்லாத அளவில் முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைக்க வேண்டும் என்று படக்குழு தவெக கட்சியினர் விஜய் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதை நடத்தி காண்பிக்க இப்போதே வேலைகள் படுவேகமாக நடந்து வருகின்றன.

- Advertisement -

உலக அளவில் முதல் நாள் வசூலில் புதிய சாதனையை ஜனநாயகம் படம் படைக்க வேண்டும். அதற்கேற்ப டிக்கெட் விற்பனை தியேட்டர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். இதற்காக தவெக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பலர் தலைமையில் விளம்பரம் செய்ய உள்ளனர். இதுவரை தமிழ் படங்களில் உலக அளவில் லியோ முதல் நாளில் 140 கோடி ரூபாய் வரையும் தி கோட் படம் ரூ. 126 கோடி வசூலித்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்த கூலி படம் முதல் நாளில் 151 கோடி ரூபாய் வசூல் செய்தது. தற்போது தமிழ் படத்தில் இந்த படம் தான் முதல் நாள் வசூலில் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் பீஸ்ட் ரூ. 38 கோடி லியோ படம் ரூ. 36.5 கோடி தி கோட் படம் ரூ. 31.5 கோடி வசூலித்தது. ஜனநாயகன் படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ. 50 கோடியை தொட வேண்டும். அதனால் கூலி படத்தின் சாதனையை ஜனநாயகன் முறியடிக்க வேண்டும் என்று ஜனநாயகன் படக்குழு கருதுகிறது அதனால் ஜனநாயகன் முதல் நாள் டிக்கெட் விலை, முதல் ஷோ டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்