- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் வீட்டில் நடந்த ரகசிய பூஜை, ஜெயலலிதா வைத்த மாந்திரீகமா? கேப்டன் உடல் நிலை குறித்த...

விஜயகாந்த் வீட்டில் நடந்த ரகசிய பூஜை, ஜெயலலிதா வைத்த மாந்திரீகமா? கேப்டன் உடல் நிலை குறித்த மர்மத்தை ஓப்பனாக போட்டுடைத்த பிரபலம்

- Advertisement -

ரசிகர்களால் கேப்டன் என்று செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த், ஒரு நடிகராக மட்டுமல்லாது மக்களுக்கு வாரி வழங்கும் ஒரு வள்ளலாகவே திகழ்ந்து வந்தார். அவரின் அலுவலகத்திற்கு எப்போது போனாலும் சாப்பாடு கிடைக்கும். ஏழை எளிய மக்களின் பசியையும் அவர்களது கஷ்டங்களையும் தீர்க்கும் கர்ணனாகவே வாழ்ந்தார் விஜயகாந்த்.

உதவி என்று தன்னை தேடி வருபவர்களுக்கு என்ன தேவையோ அதனை செய்துகொடுத்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார். இவ்வாறு கருப்பு எம்.ஜி.ஆர் என்று புகழ்பெற்ற விஜயகாந்த், அரசியல் கட்சி தொடங்கி மக்கள் பிரச்சனைகளை வெளிப்படையாக மேடை போட்டுப் பேசத் தொடங்கினார்.

- Advertisement -

கடந்த 2011 ஆம் ஆண்டு எதிர்கட்சித் தலைவராக அமர்ந்த விஜயகாந்த், ஜெயலலிதாவை நேருக்கு நேராக மிகவும் துணிச்சலாக விமர்சித்தார். ஜெயலலிதாவை அதுவரை யாரும் அது போல் எதிர்த்தது இல்லை என்பதால் விஜயகாந்த் மிகவும் வைரலான ஒரு அரசியல்வாதியாக உருவானார்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல விஜயகாந்தின் உடல் நிலை மிகவும் மோசமாக ஆனது. தற்போது அவர் எங்கும் வெளியே வருவதே இல்லை. பேசுவதற்கு கூட மிகவும் கஷ்டப்படுகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் விஜயகாந்த் கட்சியில் ஒரு முக்கிய உறுப்பினராகவும் அவரது ரசிகராகவும் இருக்கும் நடிகர் மீசை ராஜேந்திரன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பல திடுக்கிடும் சம்பவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

“விஜயகாந்திற்கு உடல் நிலை சரியில்லாமல் ஆன நாட்களில் ஒரு நாள் நான் சிலருடன் காலை 9 மணி அளவில் அவரது அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே ஹோமம் செய்திருந்த அறிகுறிகள் இருந்தது. இது குறித்து விசாரித்தபோது, விஜயகாந்திற்கு யாராவது மாந்திரீகம் வைத்துவிட்டார்களா? என்ற சந்தேகத்தில் கேரளா நம்பூத்ரீகளை அழைத்து காலை ஹோமம் செய்யப்பட்டதாக கூறினார்கள்.

ஒரு வேளை அவருக்கு யாராவது மாந்திரீகம் வைத்தது உண்மையாக இருக்கலாம். மேலும் விஜயகாந்திற்கு வயதானதால் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போயிருக்கவும் வாய்ப்பு உண்டு.

அதே போல் சட்டசபையில் கையை நீட்டி நாக்கை துருத்தி ஜெயலலிதாவிற்கு எதிராக பேசினார். ஜெயலலிதாவை யாரும் முகத்திற்கு நேராக பார்க்ககூடாது. அவர் முன் தலை குனிந்துதான் இருக்க வேண்டும். ஜெயலலிதா எப்போதும் பக்தி விஷயங்களில் மிகவும் ஈடுபாடு உள்ளவர். ஆதலால் ஜெயலலிதா மாந்திரீகம் வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள்தான் வைத்தார்கள் என்று ஆதாரபூர்வமாக தெரியாது” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

சற்று முன்