- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் 173க்கு பின் ரஜினி நடிக்கும் அடுத்த படம், கதை சொல்ல காத்திருக்கும் 2 இயக்குனர்கள்...

தலைவர் 173க்கு பின் ரஜினி நடிக்கும் அடுத்த படம், கதை சொல்ல காத்திருக்கும் 2 இயக்குனர்கள் – விஜய் பட இயக்குனருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

- Advertisement -

இந்த ஆண்டில் வெளியான கூலி படம் வணிக ரீதியாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு லாபம் கொடுத்தாலும் விமர்சன ரீதியாக அது மிக மோசமான தோல்வி படம்தான். இது படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கும் தெரியும். படத்தின் ஹீரோ ரஜினிக்கும் தெரியும். ஆனால் 500 கோடி ரூபாய் வசூலை அள்ளியது ரஜினி நடித்த படம் என்ற ஒரே காரணம்தான்.

கூலி படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பாலிவுட் நடிகை வித்யாபாலன் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். பிரபல டான்ஸர் நடிகை நோரா பதேஹி அயிட்டம் பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படம் உருவாக உள்ளது. இந்த படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி கமிட் செய்யப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இருவரும் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ஒரு படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்க உள்ளது. ஆனால் அந்த படத்தின் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. முதலில் லோகேஷ் கனகராஜ் பெயர்தான் அடிபட்டது. ஆனால் கூலி தந்த பலத்த அடியால் ரஜினி அவரை மறுத்து விட்டார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது அடுத்த படம் அதாவது 175வது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் இப்போது சுடச்சுட வெளியாகி உள்ளது. இந்த படத்தையும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ஜனநாயகன் பட இயக்குனர் எச் வினோத் அல்லது வீரதீர சூரன் படத்தின் இயக்குனர் அருண்குமார் ஆகிய இருவரில் ஒருவர் இயக்க வாய்ப்புள்ளது.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனங்கள் அவர்கள் இருவரையும்தான் தான் ரஜினி படத்தை இயக்க தேர்வு செய்து வைத்துள்ளது. அவர்கள் இருவரும் ரஜினியிடம் கதை சொல்ல காத்திருக்கின்றனர். ரஜினியிடம் அவர்கள் இருவரும் நேரில் கதைகளை சொன்ன பிறகு அதில் யாருடைய கதை பிடிக்கிறதோ, அந்த 2 பேரில் ஒருவரை ரஜினி ஓகே செய்வார் எனத் தெரிகிறது. ஜனநாயகன் படத்தை இயக்கிய எச் வினோத்துக்கு அதிக வாய்ப்பிருக்கலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்