- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது ஒரு கதையா? இதெல்லாம் ஒரு படமா? படம் பார்க்க போனா உங்களுக்கும் மொட்டை அடிச்சிடுவாங்க...

இது ஒரு கதையா? இதெல்லாம் ஒரு படமா? படம் பார்க்க போனா உங்களுக்கும் மொட்டை அடிச்சிடுவாங்க – லவ் ஓ லவ் படத்தை வெளுத்து விட்ட பிரபலம்!

- Advertisement -

இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் பவிஷ் கதாநாயகனாக நடித்த படம் லவ் ஓ லவ். நேற்று முன்தினம் இப்படம் வெளியான நிலையில் இந்த படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது, டைட்டிலை கேட்டவுடன் நாயகன் நாயகி ரெண்டு பேரும் பயங்கரமாக காதல் செய்து சேர்ந்து இருப்பார்கள் என்றுதானே நினைத்திருப்பீர்கள்? ஆனால் படத்தில் சென்று பார்த்தால் இவர்கள் இரண்டு பேரும் எங்கேயும் காதலே செய்யவில்லை.

ஒரு பெண்ணை பார்த்ததும் பையனுக்கு பிடிக்கிறது. பிடித்ததும் காதலை சொல்கிறார். அடுத்த சீனில் இருந்து பார்த்தால் அந்தப் பெண் அந்த பையனை மொட்டை அடிக்கவே பார்க்கிறது. அதை வாங்கிக்கொடு இதை வாங்கி கொடு என்று சொல்லி அவன் ஊரைச் சுற்றி கடன் வாங்கி கடன்காரனாக சுற்றுகிறான். ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் முடியாது என்று சொல்கிறான்.

- Advertisement -

ஆனால் அந்த பெண்ணும் விட முடியாது என்ற சொல்கிறான். அதற்கு ஹீரோ இனி எதுவுமே முடியாது. இது இனிமேலும் தொடர வேண்டுமென்றால் நான் செய்த மாதிரியே நீயும் எனக்கு செலவு செய் என்று ஹீரோ சொல்கிறார். அந்த பெண்ணை மொட்டை அடிக்க இந்த பையன் முயற்சி செய்கிறான். இப்படிப்பட்ட ஒரு கதை. பொதுவாக இரண்டு பேர் காதலிப்பார்கள்.

ஒன்று பெண்ணை பையன் மொட்டை அடிப்பான். இல்லையென்றால் பையனை பெண் மொட்டை அடிப்பாள். பிறகு ரெண்டு பேரும் பிரிந்து விடுவார்கள். இப்படித்தானே நாம் அந்த கதையை கேட்டிருக்கிறோம். ஒருவனை ஒரு பெண் ஏமாற்றி விட்டார். இவ்வளவு செலவு செய்திருக்கிறேன். அதையெல்லாம் மீண்டும் கொடுக்க சொல்லி கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்ததெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம்.

- Advertisement -

இந்த படத்தில் மொட்டை அடித்து மொட்டை அடித்து ஹீரோ ஓட பார்க்கையில் இந்த பெண்ணே நீ வேண்டுமானால் என்னை மொட்டை அடித்துக் கொள் என்று புதிதாக சொல்கிறார். இப்படி ஒரு கதையை கொண்டு வந்து கடைசியாக மெசேஜ் வேறு சொல்கிறார்கள். அந்த மெசேஜ் சொல்லும் வரையில் நம் பாடி தாங்காது. எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கதையாக சொல்லலாம்.

ஆனால் அதில் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும். படத்தை இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. எப்படி எப்படியோ எடுத்து வைத்திருக்கிறார்கள். அவ்வளவு மோசமாக எடுத்து வைத்திருக்கிறார்கள். குழந்தையை விட்டால் கூட சூப்பராக எடுத்து இருக்கும். ஒருத்தருக்கு ஒருத்தர் மொட்டை அடிப்பதை படமாக எடுத்திருக்கிறார்கள் என்று ப்ளு சட்டை மாறன் அந்த வீடியோவில் இந்த படத்தை விளாசி தள்ளியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்