- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி படம் திரைக்கு வருவதால் ஜூனியர் தளபதி படம் தள்ளிப் போகிறதா? - இந்த விஷயத்தில்...

தளபதி படம் திரைக்கு வருவதால் ஜூனியர் தளபதி படம் தள்ளிப் போகிறதா? – இந்த விஷயத்தில் அப்பாவே மகனுக்கு இடையூறாக வந்து விட்டாரே?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த 6 மாதங்களாக சென்சார் பிரச்னை காரணமாக திரைக்கு வராமல் தாமதம் ஆனது. இப்போது பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ஏ சான்றிதழ் படத்துக்கு வழங்கப்பட்ட நிலையில் வருகிற 24ம் தேதி ஜனநாயகன் படம் திரைக்கு வர உள்ளது.

நடிகர் விஜய் இப்போது தமிழக முதல்வராகி விட்டார். அதுவும் நடிகர் விஜய் நடித்த கடைசி படமாகவும் ஜனநாயகன் உள்ளது. இந்த படத்தில் ஏகப்பட்ட அரசியல் வசனங்கள் அரசியல் காட்சிகள் மதம் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. சில காட்சிகள் மாற்றப்பட்டும் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ஓடும் படமாகவும் உள்ளது.

- Advertisement -

வழக்கமாக விஜய் படம் என்றாலே விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப் படமாக இருக்கும். அதுபோல் தான் லியோ பீஸ்ட் தி கோட் வாரிசு போன்ற படங்கள் மொக்கை படங்களாக இருந்தும் வசூலை வாரி குவித்து விட்டன. அதுபோல் ஜனநாயகன் படம் எப்படி இருந்தாலும் வசூலை அள்ளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகி உள்ள படம் சிக்மா. லைகா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற 31ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் படத்தின் இயக்குனர் ஜேசன் சஞ்சய் நடிகை கேத்தரினா தெரசாவுடன் நடனமாடியும் இருக்கிறார்.

- Advertisement -

வருகிற 24ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் செய்யப்படுவது உறுதியாகி விட்டதால் சிக்மா படம் வருகிற 31ம் தேதி ரிலீஸ் என்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்ட்டில் இந்த படம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 14ம் தேதி நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகி உள்ளதால் ஆகஸ்ட் மாத இறுதிக்கு சிக்மா படம் ரிலீஸ் தள்ளிப் போகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தின் முதல்வராக இப்போது உள்ள நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன் படம் காரணமாக பல படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளன. இப்போது அந்த வரிசையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படமும் காத்திருப்பு பட்டியலுக்கு சென்றுவிட்டது. மகன் இயக்கிய படத்துக்கு தந்தை நடித்த படமே இப்படி இடையூறாக தடையாக மாறிவிட்டதே என்று ரசிகர்கள் ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்