நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ். இவர் பல படங்களில் நடித்தும் பெரிய அளவில் சினிமாவி்ல ரசிகர்களிடம் வரவேற்பை பெற முடியவில்லை. நடிகர்களின் வாரிசாக சினிமாவில் நடிக்க வந்து பெரிய அளவில் பிரகாசிக்க முடியாமல் போனவர்களில் சிபிராஜூம் ஒருவராக இப்போது இருக்கிறார்.
பல ஆண்டுகளாக சிபிராஜ், நடிகர் விஜயின் மிக தீவிரமான ரசிகர். ஒரு கட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடவும் அவர் முடிவு செய்திருக்கிறார். இது குறித்து தனது தந்தை சத்யராஜிடமும் கூறியிருக்கிறார். ஆனால் சத்யராஜ் அதற்கு சம்மதிக்கவில்லை.
அதற்கு அவர், உன்னுடைய தங்கை திவ்யா இப்போதுதான் திமுகவில் இணைந்து வளர்ந்து வருகிறார். நீ விஜய் கட்சி பக்கம் போனால் திவ்யாவின் எதிர்காலம் என்ன ஆகும்? இந்த தேர்தலில் தவெக கட்சி எல்லாம் வெற்றி பெறாது. நீ அமைதியாக இரு என்று சிபிராஜை தடுத்துவிட்டார்.
தனது மகனின் அரசியல் ஆசைக்கு கடுமையான முட்டுக்கட்டை போட்டு அவரை தவெக கட்சியில் சேரவிடாமல் சத்யராஜ் தடுத்துவிட்டார். ஆனால் தேர்தல் முடிவு தவெகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. தமிழகத்தின் முதல்வராக விஜய் இருக்கிறார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட காமெடி நடிகர் ஸ்ரீநாத் எம்எல்ஏ வாக ஜெயித்து இப்போது மீன்வளத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
நடிகர் சிபிராஜ் தவெக கட்சியில் இணைந்திருந்தால் நிச்சயமாக விஜய் அவரை வேட்பாளராக ஒரு தொகுதியில் நிறுத்தியிருப்பார். அவர் வெற்றி பெற்று இருந்தால் நிச்சயமாக அமைச்சர் பதவியும் கிடைத்திருக்கும். சினிமாவில் பல ஆண்டுகளாக போராடியும் ஜெயிக்க முடியாமல் தடுமாறி வரும் நடிகர் சிபிராஜூக்கு ஒரு வளமான எதிர்காலம் அமைந்திருக்கும்.
ஆனால் திமுக ஆதரவாளரான நடிகர் சத்யராஜ் மகள் திவ்யாவை காரணம் காட்டி தவெக கட்சிக்கு மகன் சிபிராஜை போக விடாமல் தடுத்து விட்டார். ஆனால் திவ்யாவுக்கும் திமுக தலைமை வேட்பாளர் வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டது. இப்போது திவ்யாவுக்கும் திமுகவில் பெரிய வளர்ச்சி இல்லை. இந்த சூழலில் தனக்கு முட்டுக்கட்டை போட்ட அப்பா சத்யராஜை மகன் சிபிராஜ் வெளுத்து வாங்கி வருவதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது





