- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு சின்ன ரூம்ல ஏஸியை போட்டுட்டு அதை பண்றது ரொம்ப கஷ்டமான வேலை, கையெடுத்து கும்பிடணும்...

ஒரு சின்ன ரூம்ல ஏஸியை போட்டுட்டு அதை பண்றது ரொம்ப கஷ்டமான வேலை, கையெடுத்து கும்பிடணும் – ஓபனாக பேசிய நடிகை ரோஜா!

- Advertisement -

தெலுங்கு அரசியலில் கடந்த பல ஆண்டுகளாக பிஸியாக இருந்த நடிகை ரோஜா, ஆந்திராவில் ஆட்சி மாற்றம் நடந்து விட்டதால் இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். அன்பே டயானா லெனின் பாரதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர் தொடர்ந்து பல படங்களில் அம்மா கேரக்டரில் முக்கியமான லீடிங் கேரக்டரில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, தமிழில் நான் நடித்த படங்களில் சொந்த குரலில் பேசி நடிக்கவில்லை. டப்பிங் வாய்ஸ் தான். ஆனால் தெலுங்கில் நிறைய படங்களில் விருது வாங்க வேண்டும் என்பதற்காக சொந்த குரலில் பேசி நடித்திருக்கிறேன். அப்படி விருதும் வாங்கியிருக்கிறேன்.

- Advertisement -

ஆனால் தமிழில் நடித்த அன்பே டயானா படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறேன். இவங்க சொன்னாங்க. நீங்க டப்பிங் சொந்த குரலில் பேசினால்தான் அந்த ஃபீல் வரும் என்று சொன்னாங்க. உங்க குரல் பாலிடிக்ஸ்ல இருக்கறதால எல்லாருக்கும் தெரியும்.

வேற யாராவது பேசினா இது டப்பிங் என்று தெரிஞ்சுடும். அதனால் நீங்க தான் டப்பிங் பண்ணியாகணும் என்று டைரக்டர் கேட்டார். சரின்னு தைரியமா பண்ணிட்டேன். தெலுங்கில் பண்ணும்போது அது ரொம்ப ஈஸியாக இருக்கும். ஆக்டிங் பண்ணும்போது அந்த எமோஷனல் ஈஸியா நாம கேரி பண்ணுவோம்.

- Advertisement -

ஆனா ஒரு ஏஸி ரூம்ல ஒரு சேர் போட்டு ஒரு சின்ன ரூம்ல அந்த டிவியில் அந்த லிப் மூவ்மென்ட் பார்த்து பார்த்து பேசறதுக்கு இருக்கே? அது உண்மையிலேயே ரொம்பவும் கஷ்டமான விஷயம். டப்பிங் பண்றவங்களை எல்லாம் உண்மையிலேயே கையெடுத்து கும்பிடணும். ரொம்ப கஷ்டமான விஷயம்.

ஏன்னா அந்த ஃபீல் டப்பிங்குல கொண்டு வரணும். இங்கே கூலா ஒரு ஏஸி ரூம்ல சேர் போட்டு உட்கார்ந்துட்டு பேசணும்ன்னா எப்படி? அங்கே ஷூட்டிங் ஸ்பாட்டுல எல்லாரும் பேசற டயலாக்குக்கு நாம எமோஷனலா ஃபீல் பண்ணி பதில் பேசிடலாம். லொக்கேஷன்ல செட்ல பண்றது ரொம்பவும் ஈஸி. இது கஷ்டமான ஜாப் என்று நடிகை ரோஜா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்