தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் கூல் சுரேஷ். குறிப்பாக சிலம்பரசன் சந்தானம் டி ராஜேந்தர் உள்ளிட்டோர் நடித்த படங்களில் கூல் சுரேஷ் அதிகமாக நடித்திருக்கிறார். ஒருமுறை விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் போட்டியாளராக கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
புதிய படங்கள் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வித்யாசமான கெட்டப்பில் வருவது, குண்டக்க மண்டக்க ஏதாவது பேசுவது என அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது அவரது வழக்கம். சமீபத்தில் இயக்குனர் கே பாக்யராஜ் மறைவுக்கு கூட முருங்கைகாய்களுடன் வந்து பலத்த விமர்சனத்தில் சிக்கினார். கூல் சுரேஷ் என்றாலே ஏதாவது விவகாரமாக பேசி செய்து சர்ச்சையில் அடிபடுவது வழக்கமாகி விட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கூல் சுரேஷ் கூறியதாவது, சுள்ளானை சூடாக்கறீங்க? சுளுக்கெடுக்கப் போறார். புரியதுங்களா? தனுஷ் சார் பேசுனதை பார்த்திருப்பீங்க. அவர் சுள்ளான். சூடானா சுளுக்கு எடுத்துடுவார் அப்படீங்கற மாதிரி தான் சுள்ளான் படத்தில் அவர் வசனம் பேசியிருப்பார்.
ஆனா 2031ல் என்ன நடக்க போகுதுன்னு தெரியலையே பா. எனக்கு தெரிஞ்சு பழைய அரசியல் கட்சி எல்லாம் இருக்கிறது இல்லையா? அதெல்லாம் இருக்குமா இல்லையாங்கறது எனக்கு தெரியலே. ஆனா புது புது கட்சிகள் உதயமாகும். அதுல மாற்றுத் கருத்தே இல்லை.
எனக்கு தெரிஞ்சு நடிகர்கள் கொறைஞ்சது ஒரு 10 பேரு கட்சி ஆரம்பிச்சிடுவாங்கன்னு நெனைக்கிறேன். அதனால் யார் யாருக்கு ஓட்டு போடுவாங்கன்னே தெரியாது. அதனால் யாராக இருந்தாலும் சிந்திச்சு ஓட்டுப் போடுங்க. உங்களுக்கே தெரியும் கூல் சுரேஷ் கட்சி. சிஎஸ்கே கட்சி. அதுவும் கூட 2031ல் போட்டி போடலாம்.
எதுவாக இருந்தாலும் வெயிட் பண்ணி பாருங்க. நான் டிவிகே கட்சியில் சேருவேனா என்பதை இப்போது ஓபனாக சொல்ல முடியாது. எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும் என்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கூல் சுரேஷ் காமெடி செய்திருக்கிறார். தலித் அமைச்சர்கள் குறித்து விமர்சித்த பா ரஞ்சித் குறித்தும் கூல் சுரேஷ் பேசியிருந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.





