- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக முதல்வர் விஜய் போஸ்டர்கள் கிழிப்பு, ஜனநாயகன் படக்காட்சிகள் தியேட்டர்களில் ரத்து - கர்நாடகாவில் வலுக்கும்...

தமிழக முதல்வர் விஜய் போஸ்டர்கள் கிழிப்பு, ஜனநாயகன் படக்காட்சிகள் தியேட்டர்களில் ரத்து – கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பால் தவெகவினர் அப்செட்!

- Advertisement -

காவிரி நதி நீர் பிரச்சனை இப்போது தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் பெரிய பிரச்னையாக மாறி வருகிறது. காவிரி நதிநீர் ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகின்றனர். காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3500 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று கடந்த 28ம் தேதி உத்தரவிட்டது.

இதை கண்டித்தும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகாவை சேர்ந்த விவசாயிகள் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். நான்காவது நாளாக தொடர்ந்து மாண்டியா மைசூரு பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் திரையிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் சாம்ராஜ் நகரில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று ஜனநாயகம் படம் திரையிடப்பட இருந்த நிலையில் கன்னட அமைப்பினர் திரையரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் விஜயின் ஜனநாயகன் படக்காட்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டது. ஜனநாயகன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரை முற்றுகையிட்டு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

நேற்று மாண்டியா டவுனில் ஜனநாயகன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் ஜனநாயகன் படத்தின் போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். மேலும் கர்நாடக அரசு எந்தவித அழுத்தத்திற்கும் அடிபணிய கூடாது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்றும் அவர்கள் ஆவேசமாக கோஷமிட்டனர்.

- Advertisement -

அதன் பிறகு போராட்டக்காரர்கள் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக செயல்படும் தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது எனவும் கோஷமிட்டனர். அங்கிருந்த ஒரு தியேட்டரில் 10 மணி காட்சி திரையிடப்பட்டு இருந்த நிலையில் போராட்டக்காரர்களுடன் தியேட்டர் நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று படத்தை உடனே நிறுத்துவதாக அறிவித்தனர்.

அதன்படி ஜனநாயகன் படக்காட்சி உடனடியாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து விஜய்க்கு எதிராக கர்நாடகாவில் எதிர்ப்பும் கண்டனமும் வலுத்து வரும் நிலையில் படக்காட்சிகள் அங்கே தொடர்ந்து திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகன் படம் போதிய வசூல் இல்லாத நிலையில் கர்நாடகாவில் இனி ஜனநாயகன் படம் திரையிடுவதே சிக்கல் ஆகி விட்டதால் வசூல் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்