ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஆன நிலையில் தமிழ் சினிமாவில் பல புதிய படங்கள் திரைக்கு வருவது உறுதியாகி விட்டது. அந்த வகையில் மற்ற மாதங்களை காட்டிலும் இந்த மாதம் பல முக்கிய படங்கள் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. ஜனநாயகன் படம் ரிலீஸ் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சில படங்களும் இப்போது திரைக்கு வருகின்றன. அந்த வகையில் இந்த மாதம் மொத்தம் 8 படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன.
அந்த வரிசையில் வருகிற 7ம் தேதி நடிகர் மாதவன் நடித்த ஜிடிஎன் படம் திரைக்கு வர உள்ளது. கோவையை சேர்ந்த விஞ்ஞானி ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாறு படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இதில் நடிகர் சத்யராஜூம் நடித்திருக்கிறார்.
அதே போல் நடிகர் விஷால் முதன் முறையாக இயக்கி நடித்த முதல் படம் மகுடம் வருகிற 14ம் தேதி வெளியாக உள்ளது. அதே போல் இயக்குனராக உள்ள லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் டிசி என்ற படமும் வருகிற 7ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் டைரக்ட் செய்திருக்கிறார்.
வருகிற 14ம் தேதி நடிகை நயன்தாரா நடிகர் கவின் இணைந்து நடித்துள்ள ஹாய் படம் திரைக்கு வர உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நயன்தாரா நடித்த இந்த படம் திரைக்கு வருகிறது. அதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர் கவினுக்கு பிளடி பெக்கர் ஸ்டார் படங்கள் சரியாக போகாத நிலையில் இந்த படம் கம்பேக் தருமா என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.
மேலும் அதே நாளில் நடிகர் சூர்யா நடிகை மமிதா பைஜூ நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை வாத்தி லக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்ட் செய்திருக்கிறார். சூர்யாவுக்கு கருப்பு பட பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு இந்த படம் திரைக்கு வர உள்ளது.
வருகிற 20ம் தேதி மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த ஐயம் கேம் என்ற படம் திரைக்கு வர உள்ளது. அடுத்த நாள் 21ம் தேதி தெலுங்கு முன்னணி நட்சத்திர நடிகர் நானி நடிப்பில் தி பாரடைஸ் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 26ம் தேதி நடிகர் யஷ் மற்றும் கியாரா அத்வானி நயன்தாரா ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடித்த டாக்ஸிக் படம் திரைக்கு வர உள்ளது.





