- Advertisement -
Homeபொழுதுபோக்குசத்தமே இல்லாமல் திரைக்கு வரும் 2 படங்கள், பிரமோஷனில் களை கட்டிய சூர்யா படம் -...

சத்தமே இல்லாமல் திரைக்கு வரும் 2 படங்கள், பிரமோஷனில் களை கட்டிய சூர்யா படம் – விஷால் நயன்தாரா இனியாவது சுறுசுறுப்பு காட்டுவாங்களா?

- Advertisement -

நடிகர் சூர்யா மமிதா பைஜூ நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் நடிகர் விஷால் நடித்து அவரே முதன் முறையாக டைரக்ட் செய்த மகுடம் மற்றும் நடிகை நயன்தாரா நடிகர் கவின் நடித்த ஹாய் ஆகிய 3 படங்கள் வருகிற 14ம் தேதி திரைக்கு வருகின்றன. இந்த 3 படங்களுமே அதிக முக்கியமான படங்களாக உள்ளன.

கருப்பு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரைக்கு வருகிறது. 2 தினங்களுக்கு முன்பு கோவையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த பிரமோஷன் பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்றடைந்திருக்கிறது.

- Advertisement -

ஆனால் நடிகர் விஷால் அவரே இயக்கி நடித்துள்ள மகுடம் படம் பற்றிய பிரமோசன் பெரிய அளவில் இன்னும் செய்யப்படவில்லை. படம் ரிலீஸாக இன்னும் ஒரு வாரமே உள்ளது. வரும் 8ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மகுடம் படம் இசை வெளியீட்டு விழாவை நடத்த இயக்குனர் விஷால் திட்டமிட்டுள்ளார்.

மேலும் அடுத்த சில நாட்களில் பிரஸ்மீட்டில் மகுடம் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவற்றை வெளியிடவும் விஷால் முடிவு செய்திருக்கிறார். குறிப்பிட்ட கால இடைவெளியில் படங்களின் டிரெய்லர் டீசர் இசை வெளியீடு நடந்தால் தான் படத்துக்கு பெரிய ஹைப் கிடைக்கும் என்ற நிலையில் மகுடம் படம் பப்ளிசிடியில் பின்தங்கி விட்டது.

- Advertisement -

அதே போல் நடிகை நயன்தாரா நடிப்பில் தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாய் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் நயன்தாரா இருக்கிறார். இந்த படத்தின் பிரமோசனுக்காக நடிகர் கவின் தயாராக உள்ள நிலையில் படத்தின் நாயகி நயன்தாரா இன்னும் பிரமோசனை துவக்கவில்லை.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் மகுடம் ஹாய் படங்களை பின்னுக்கு தள்ளி பிரமோசனில் சூர்யா படம்தான் முன்னிலையில் உள்ளது. படம் பாதி பப்ளிசிடி பாதி என்ற நிலையில் ஒரு படத்தின் வெற்றி இன்றைய காலகட்டத்தில் இருப்பதால் படத்துக்கு தேவையான பப்ளிசிடி செய்யாத நிலையில் மகுடம் ஹாய் படங்கள் வசூலை குவிக்குமா என்பதே ரசிகர்களின் சந்தேகமாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்