- Advertisement -
Homeபொழுதுபோக்குகேர்ள் பிரண்ட் இல்லே, அதனால நானும் உதயநிதியும் அங்க போக முடியலே - மகுடம் பட...

கேர்ள் பிரண்ட் இல்லே, அதனால நானும் உதயநிதியும் அங்க போக முடியலே – மகுடம் பட விழாவில் சீக்ரெட்டை போட்டுடைத்த நடிகர் விஷால்

- Advertisement -

நடிகர் விஷால் இயக்குனராக அறிமுகமாகி உள்ள படம் மகுடம். இந்த படத்தில் ஹீரோவாக விஷால் 3 வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் மகுடம் படத்தில் அஞ்சலி துஷாரா விஜயன் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை முதலில் ரவி அரசு என்பவர் இயக்க கமிட் ஆகி பிறகு வெளியேறிய நிலையில் விஷால் இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.

சென்னையில் நடந்த மகுடம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் நாயகன் மற்றும் இயக்குனர் விஷால் பல விஷங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். நடிகர் விஷால் இந்த படத்தின் 3 விதமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார். இதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் புருஷன் என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

- Advertisement -

மகுடம் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் விஷால் பேசியதாவது, மகுடம் படம் சூப்பர் ஹிட் பிலிம்ஸ் தயாரிக்கும் 99 வது படமாகும். இந்த நிறுவனம் என்னை 45வது இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார்கள். இந்த நேரத்தில் என்னுடைய குருநாதர் ஆக்சன் கிங் அர்ஜூனுக்கு நன்றி. ஆர்பி சௌத்ரி சாருக்கு ரொம்ப ரொம்ப கடமைப்பட்டிருக்கிறேன்.

ஏனென்றால் ஓராண்டு காலம் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பாதிப்புகள் ஏற்பட்டது. அந்த சமயத்தில் படம் வெற்றிகரமாக வரணும் என்பதற்காக என் கஷ்டங்களில் என்னுடன் இருந்து என்னை ஊக்கப்படுத்தினார். அதேபோல் என் கஷ்டங்களில் என்னை ஊக்கப்படுத்தி இவ்வளவு பாசிட்டிவ் ஆக நிற்க வைத்த என் வருங்கால மனைவி சாய் தன்சிகாவிற்கும் நன்றி சொல்கிறேன்.

- Advertisement -

இதே வேறு யாராவது இருந்தால் இந்த நேரம் பிச்சிகிட்டு ஓடி இருப்பாங்க. மகுடம் படத்தில் நடித்துள்ள ஜான் விஜய் எனக்கு கல்லூரியில் சீனியர். நானும் துணை முதல்வராக இருந்த உதயநிதியும் ஒரு காலத்தில் கிளப்புக்குள் போக முடியாமல் வெளியே நிற்போம். அந்த சமயம் ஃகேர்ள் பிரண்ட் இருந்தால் தான் உள்ளே போக முடியும். அப்போது ஜான் விஜய் ஒரு லுங்கி சட்டை அணிந்து கூலிங் கிளாஸ் உடன் உள்ளே போனார்.

அப்படி ஒரு ஆட்டிட்யூட் இப்போது வரைக்கும் அதே ஆட்டிடியூட் வச்சிருக்கார். அதை இந்த படத்தில் அவரை வெச்சு பயன்படுத்தினேன். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மிக்க நன்றி. நான் அவரின் தீவிர ரசிகன். அவரை பயன்படுத்தி இந்த படத்தில் சின்னதா ஒரு விஷயம் பண்ணி இருக்கேன் என்று அந்த விழாவில் நடிகர் மற்றும் மகுடம் பட இயக்குனர் விஷால் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்