தமிழ் சினிமாவில் பழைய படங்களில் எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் போன்றவர்களுடன் நாயகியாக நடித்தவர் தேவிகா. அவரது மகள் கனகாவும் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் பாலாஜி பிரபு நடிகை தேவிகா குறித்து கூறியதாவது, நடிகை கனகாவின் அம்மா தேவிகா ஒரு பொசசினஸ் ஆக இருந்தார்.
கனகா நடிக்கும் படங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து சேர் போட்டு உட்கார்ந்து கொள்வார். அப்போது கனகாவை இந்த டயலாக் பேச சொல்லாதீங்க, இந்த காஸ்ட்யூம் வேணாம். வேற மாத்துங்க. இந்த சீனை இப்படி கிளாமரா எடுக்காதீங்க என்று சொல்லிக்கொண்டே இருப்பார். இப்படி அடிக்கடி உதவியாளர்களை கூப்பிட்டு அவர் சொல்லிட்டே இருந்தது பெரிய குடைச்சலாக இருந்தது.
சினிமா என்றால் கிளாமர் இருக்கும். நடிக்க கமிட் ஆன பிறகு இப்படி நடிக்காதே அப்படி நடிக்காதே என ஒரு நடிகைக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? அப்போது ஒரு சம்பவம் நடந்தது. அதிசயப்பிறவி என்ற ஒரு படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தில் 2 பேர் அவருக்கு ஜோடி. அதில் கிராமத்து ரஜினிக்கு கனகா ஜோடியாக நடித்திருந்தார்.
அப்போதும் இதே மாதிரி தான். தேவிகா வந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் சேரில் அமர்ந்துக்கொண்டு இதை மாத்துங்க, அதை மாத்துங்க இப்படி செய்யாதீங்க என்று சொல்லிக்கொண்டே இருந்தார். கனகா பேச வேண்டிய டயலாக் எல்லாம் பேப்பர்ல பார்த்து இதை எல்லாம் பேசக்கூடாது என்று அவரே டயலாக்குகுளை எல்லாம் அழித்து தந்து விடுவார்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்த ரஜினிகாந்த், அந்தம்மா பக்கத்துல
சேர் போட்டு உட்கார்ந்து கொண்டார். அப்போது, அம்மா நீங்களும் பெரிய நடிகையா இருந்தவங்க. சீனியர் ஆர்ட்டிஸ்ட். நீங்களும் நிறைய படங்களில் நடிச்சிருக்கீங்க. உங்களுக்கு சினிமான்னா என்னான்னு தெரியும். நீங்க கொஞ்சமாவது சுதந்திரம் கொடுத்தால் தான் அந்த பொண்ணு பெரிய நடிகையா வளரும்.
அவங்க பெரிய நடிகையா வரணும்ன்னு நீங்க ஆசைப்படறீங்க. ஆனா இப்படி முட்டுக்கட்டை போட்டீங்கன்னா அவங்க எப்படி சுதந்திரமா செயல்படுவாங்க? நீங்க ஸ்பாட்டுல இருக்கிற போது உங்களை மீறி உங்க பொண்ணை தப்பா எடுத்துட முடியுமா? சினிமா தானேம்மா இது? சில டயலாக்ஸ் சில கிளாமர் சீன் இருக்கத்தானே செய்யும்? அதை அட்ஜஸ்ட் பண்ணித்தானே போகணும் என்று அவருக்கு ரஜினிகாந்த் அட்வைஸ் செய்தார். அப்புறம் தான் அந்த அம்மாவின் அந்த பொசசிவ்னஸ் கொஞ்சம் குறைந்தது என்று பாலாஜி பிரபு அதில் கூறியிருக்கிறார்.





