- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி அதுவாக இருக்குமா? - வரும் 16ம் தேதி ரஜினி கமல்...

அவர் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி அதுவாக இருக்குமா? – வரும் 16ம் தேதி ரஜினி கமல் பங்கேற்கும் அந்த நிகழ்வில் அவர் கலந்துக் கொள்வாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பொக்கிஷ படைப்பாளிகளாக வாழ்ந்து மறைந்தவர்கள் இயக்குனர்கள் பாரதிராஜா கே பாக்யராஜ். மண்ணை விட்டு மறைந்த அவர்களது சாதனைகளை போற்றும் வகையில் வரும் 16ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் பெப்ஸி அமைப்பு உள்ளிட்ட சினிமா சங்கங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன. வரும் 16ம் தேதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த நிகழ்வில் முதல்வர் விஜய் கலந்து கொள்வாரா என்பது கேள்வியாக எழுந்துள்ளது.

தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்ற பிறகு அதாவது மே 10ம் தேதிக்கு பிறகு கடந்த 3 மாதங்களாக பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டாலும் சினிமா நிகழ்ச்சிகள் எதிலும் இதுவரை விஜய் பங்கேற்கவில்லை. முதல்வர் ஆவதற்கு முன்பு தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு இயக்குனர் பாரதிராஜா பாக்யராஜ், நடிகர் அஜீத்குமாரின் தாயார் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

- Advertisement -

ஜனநாயகன் படத்தை தனியார் தியேட்டரில் பார்த்தார். மற்றபடி பெரிய அளவில் சினிமா நிகழ்ச்சிகளுக்கு விஜய் முக்கியத்துவம் தரவில்லை. சினிமாத்துறை சார்ந்த பலரது வாழ்த்துகளை மட்டுமே நேரில் ஏற்றுக்கொண்டார். அந்த சூழ்நிலையில் வரும் 16ம் தேதி நடக்கும் இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டால் அவர் முதல்வராக கலந்துக்கொண்ட முதல் சினிமா நிகழ்ச்சி குதுவாக இருக்கும்.

இயக்குனர்கள் பாரதிராஜா கே பாக்யராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் கூட முதல்வர் விஜய் நடித்தது இல்லை. பிற்காலத்தில் அவர்களுடன் விஜய் இணைந்து நடித்ததும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு விஜய் வருவாரா மாட்டாரா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. ஆகஸ்ட் 16ம் தேதி ஞாயிறு விடுமுறை தினம் என்றாலும் முதல்வர் விஜய் வருவது சந்தேகம்தான் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்