- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு உப்புமா டைரக்டர் கூட இதை விட நல்ல படமா எடுப்பார், அவர் முகத்துக்காக படம்...

ஒரு உப்புமா டைரக்டர் கூட இதை விட நல்ல படமா எடுப்பார், அவர் முகத்துக்காக படம் ஓடுச்சு – எச் வினோத் குறித்து கடுமையாக விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

சதுரங்க வேட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் எச் வினோத். தொடர்ந்து தீரன் அதிகாரம் 1 நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் கடைசியாக நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை டைரக்ட் செய்தார். கடந்த மாதம் 23ம் தேதி இந்த படம் வெளியானது.

இதுவரை 300 கோடி ரூபாய்க்கு வசூல் செய்த இந்த படம் பகவந்த் கேசரி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த சமீபத்திய படங்களில் மிக மோசமான கதைக்களத்தில் சொதப்பிய படம் இதுதான் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த படம் திரைக்கு வந்த 3 நாட்களிலேயே பல தியேட்டர்களில் 10 பேர் கூட படம் பார்க்க வரவில்லை என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, ஜனநாயகன் படத்தில் நானே எழுதியது என்று சில போர்ஷன் எல்லாம் நானே எடுத்தது என்று சொன்னார் இல்லையா? அதுக்கு அப்புறம் அவரை நம்ப யாரும் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

ஏனென்றால் அவ்வளவு மோசமாக ஒருத்தர் வந்து அவ்வளவு கற்பனை வறட்சியா என்று நினைக்கிற அளவுக்கு அந்த காட்சிகளை அவர் எடுத்து வைத்திருந்தார். இதுக்கு உப்புமா டைரக்டர் கூட அந்த படத்தை இன்னும் பிரமாதமாக பண்ணியிருப்பாங்க.

- Advertisement -

இவரை எல்லாம் எப்படி ஒரு இயக்குனர் என்ற கேட்டகிரியில் வைத்து நாம் கொண்டாடினோம் என்ற கேள்வி எல்லாம் நமக்குள்ள வந்தது. அவ்வளவு மோசமான காட்சிகள் அது எல்லாம். அதை எல்லாம் அவர் சிந்திச்சு எடுத்து பெருமையாக காலரை தூக்கிட்டு பேசினது எல்லாம் ரொம்ப காமெடியா இருக்குது இப்ப நினைச்சா.

விஜய் என்கிற ஒரு முகத்துக்காக தான் அந்த படம் ஓடுச்சு. இதுவே வேற ஒரு நடிகர் நடிச்சிருந்தா அந்த படம் ஒரே நாளில் ஒண்ணுமே இல்லாம போயிருக்கும். இப்படிப்பட்ட ஒரு படத்தை இனிமேல் ராஜ்கமல் நிறுவனத்தில் எப்படி படம் பண்ண கூப்பிடுவாங்க? இவரை ஆசைப்பட்டாலும் அது நடக்காது என்று அந்தணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்