- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஒரு கடிதம் படித்த போது ஏற்பட்ட தாக்கம் - பட்டுப்புடவை திட்டத்தை அறிவித்த நடிகர்...

அந்த ஒரு கடிதம் படித்த போது ஏற்பட்ட தாக்கம் – பட்டுப்புடவை திட்டத்தை அறிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ்!

- Advertisement -

நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, லாரன்ஸ் அறக்கட்டளை தனது 20 ஆண்டுகால சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த வேளையில் பட்டுப்புடவை திட்டம் எனும் புதிய முன்னெடுப்பை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒருமுறை ஒரு பெண் என்னிடம் வந்து தனக்கு ஒரு அழகான பட்டுப்புடவை வேண்டும் என்று ஒரு கடிதம் வழங்கினார். அந்த கடிதத்தை படித்த போது கிராமப்புறங்களில் வாழும் இன்னும் எத்தனை பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு பட்டுப்புடவை கூட பார்த்திருக்கவோ அல்லது அணிந்திருக்கவோ வாய்ப்பு இல்லை என்று சிந்தித்தேன். எனவே முதல் கட்டமாக 5000 பட்டு புடவைகளை வழங்க திட்டமிட்டுள்ளேன். தாய்மார்களின் ஆசியைப் பெறவும் அவர்களை மகிழ்ச்சிப் படுத்தவும் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. வரும் 29ம் தேதி அன்று என் பிறந்தநாளில் ராயபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சற்று முன்