- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை சிம்ரனுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசையா? தலைவரே கொஞ்சம் உஷாரா இருங்க - சூப்பர்...

நடிகை சிம்ரனுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசையா? தலைவரே கொஞ்சம் உஷாரா இருங்க – சூப்பர் ஸ்டாரை எச்சரிக்கும் ரஜினி ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்தவர் சிம்ரன். பம்மல் கே சம்பந்தம் பஞ்சதந்திரம் பிரியமானவளே துள்ளாத மனமும் துள்ளும் வாலி ஏழுமலை அரசு அவள் வருவாளா ஜோடி கண்ணெதிரெ தோன்றினாள் விஐபி ரமணா உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்.

திருமணத்துக்கு பிறகு சில ஆண்டுகள் நடிப்பில் இடைவெளி விட்ட நடிகை சிம்ரன் மீண்டும் என்ட்ரி கொடுத்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதில் அந்தகன் சீமராஜா போன்ற படங்களில் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

- Advertisement -

பேட்ட படத்தில் ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளில் அவரது மனைவியாக நடிகை திரிஷா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் பேட்ட படத்தில் ரஜினிக்கு சிம்ரன் ஜோடிதான் என்றாலும் இருவரும் இணைந்து நடிப்பதற்கான காட்சிகள் மிகவும் குறைவாகவே இருந்தன. அதனால் ஒரு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளில் மட்டுமே ரஜினி சிம்ரன் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த நிலையில் இப்போது இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அவரது 173வது படம் தர்மன் படத்தில் நடிகை சிம்ரன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை தயாரிப்பது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமல்ஹாசன்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ரஜினி டாக்டராக நடித்து வருகிறார்.

- Advertisement -

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் சூர்யா லைலா கருணாஸ் சங்கீதா உள்ளிட்டோர் நடித்த படம் பிதாமகன். இந்த படத்தில் ஒரு காட்சியில் சூர்யாவும் விக்ரமும் சேர்ந்து நடிகை சிம்ரனை கடத்திச் சென்று தங்கள் கிராமப்பகுதியில் அவரை நடனமாட சொல்வார்கள். சிம்ரனும் அவர்களின் அன்பை புரிந்துக்கொண்டு சூர்யாவுடன் பல பாடல்களுக்கு நடனமாடி அசத்துவார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சிம்ரனிடம் பேசிய தொகுப்பாளர், பிதாமகன் படத்தில் சூர்யா உங்களை கடத்தியது போல் உங்களுக்கு ஒரு வாய்ப்பு வந்தால் யாரை எந்த ஹீரோவை கடத்துவீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு யோசித்து சிரித்தபடி சொன்ன சிம்ரன், ரஜினி சார் என்றார். இதைக் கேட்டு அங்கு இருந்தவர்கள் எல்லாம் சிரித்து விட்டனர்.
தர்மன் படத்தில் ரஜினியுடன் தான் சிம்ரன் இப்போது நடிக்கிறார் என்பதால், தலைவரே உஷாரா இருங்க என்று அவரது ரசிகர்கள் எச்சரித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்