- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பாடா… பெருமூச்சு விட்ட விடாமுயற்சி படக்குழுவினர், ஷூட்டிங் முடிஞ்சிருச்சாம், இனி போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் துவங்குறாங்களாம்...

அப்பாடா… பெருமூச்சு விட்ட விடாமுயற்சி படக்குழுவினர், ஷூட்டிங் முடிஞ்சிருச்சாம், இனி போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் துவங்குறாங்களாம் – ஆனா அதுபத்தி ஒண்ணுமே சொல்லலையே பாஸ்?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. எச் வினோத் இயக்கிய இந்த படம், கடந்த ஆண்டு 2023ல், ஜனவரி 14ம் தேதி தை பொங்கல் பண்டிகையின் போது வெளியானது. இப்போது ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் உள்ள நிலையில் ஒன்றரை ஆண்டுகளாக அவரது படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கியது. ஆனால் 4 மாதங்கள் மட்டுமே ஷூட்டிங் நடந்த நிலையில், மீண்டும் 6 மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை. இடையிடையே மழை, கடும் குளிர், மணல் புயல்,பனிப்பொழிவு என படப்பிடிப்பு பலமுறை தடைபட்டது.

ஒரு கட்டத்தில் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தரப்பில் படப்பிடிப்பை நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்க நேரிட்டது. இந்த ஆண்டில் பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை படப்பிடிப்பு நடக்கவே இல்லை. அந்த காலகட்டத்தில்தான், அஜீத்குமாருக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது.

தொடர்ந்து, அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படப்பிடிப்பிலும் கலந்துக்கொண்டார். அஜர்பைஜானில் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு, ஐதராபாத்தில் படத்தின் இறுதி கட்ட சண்டை காட்சிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் படமாக்கப்பட்டது. அதே நேரத்தில் குட்பேட் அக்லி படப்பிடிப்பும் ஐதராபாத்திலும் நடந்ததால் அதிலும் அஜீத்குமார் பங்கேற்றார்.

பகலில் விடாமுயற்சி படப்பிடிப்பிலும், மாலை 6 மணிக்கு பிறகு குட்பேட் அக்லி படப்பிடிப்பிலும் அஜீத்குமார் மாறி மாறி பங்கேற்று நடித்துக் கொடுத்தார். இது அஜீத்குமார் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை, பாராட்டை பெற்றது. இவ்வளவு சின்சியராக அஜீத்குமார் தனது படங்களை முடித்துக்கொடுக்க தீவிரம் காட்டியதை படக்குழுவினரும் பாராட்டினர்.

இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்துள்ளது. அதனால் படப்பிடிப்பு குழுவினர் நிம்மதியடைந்து பெருமூச்சு விட்டுள்ளனர். ஆனால் இன்னும் சில காட்சிகள் மட்டுமே பேட்ச் ஒர்க் செய்ய வேண்டி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அஜீத்குமார், திரிஷா நடிப்பில் பாடல் காட்சி எடுக்க வேண்டிய நிலையில், அதுபற்றி எந்த தகவலும் இல்லை. படத்தில் அந்த பாடல் இடம்பெறுமா, விட்டு விட்டார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நீடிக்கிறது.

சற்று முன்