- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் பார்மூலாவில் விஜயை காப்பியடிக்கிறாரா நடிகர் சிவகார்த்திகேயன்? பிரின்ஸ்சா இருந்தவர் இப்போ கிங்கா மாறிட்டாரே? -...

அரசியல் பார்மூலாவில் விஜயை காப்பியடிக்கிறாரா நடிகர் சிவகார்த்திகேயன்? பிரின்ஸ்சா இருந்தவர் இப்போ கிங்கா மாறிட்டாரே? – விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

இனி தமிழ்நாடு சினிமா நடிகர்களின் கைகளில்தானா? நாட்டை நல்ல விதமாக ஆட்சி செய்வதற்கு காமராஜர் போன்ற அப்பழுக்கற்ற பெருந்தலைவர் யாருமே இல்லையா என்று கதறுகிற அளவுக்கு தமிழக மக்களின் நிலமை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு இருக்கிறது. சினிமா மோகம் நிறைந்த மக்களின் ஆதரவு இருக்கும் வரை சினிமா ஹீரோக்கள் முதல்வர் ஆவதை தடுக்க முடியாது. அதே நேரத்தில் எம்ஜிஆரை போல எந்த நடிகரும் நல்லாட்சி தரப் போவதும் இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இன்று வெளியான ஒரு வீடியோவில் மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, நடிகர் சிவகார்த்திகேயன் அரசியல் களத்தில் இறங்க தயாராகி விட்டார் என்பதை சமீபத்தில் நடந்த அவரது நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இவர் விஜயை போலவே அந்த பார்மூலாவை காப்பியடிக்கிறார்.

- Advertisement -

விஜய் ஆரம்பத்தில் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதே போல் சிவகார்த்திகேயன் தனது ரசிகர் மன்றத்தை இப்போது நற்பணி இயக்கமாக மாற்றியிருக்கிறார். விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றால், சிவகார்த்திகேயன் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என கேப்ஷன் வைத்திருக்கிறார்.

விஜய் ஆரம்பத்தில் இளையதளபதி என அழைக்கப்பட்டு பிறகு தளபதி என்று மாற்றப்பட்டார். அதே போல் முதலில் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் என அழைக்கப்பட்ட நிலையில் இப்போது கிங் என்று அழைக்கப்படுகிறார். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் விஜயை சிவகார்த்திகேயன் காப்பியடித்து செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அந்த காலத்தில் வயதான பாட்டிகளை கட்டியணைத்து தன் தாய் பாசத்தை அன்பை உண்மையாக வெளிப்படுத்தியவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். ஆனால் இப்போதும் விஜய் போன்றவர்கள், வயதான பாட்டிக்கு கூலிங்கிளாஸ் தந்து அதே சென்டிமென்டை அரசியலாக்கி பார்க்கின்றனர். சிவகார்த்திகேயனுக்கும் வயதான பெண்மணி இவருக்கு பொட்டு வைக்கிற மாதிரி போட்டோ போட்டு அதே சென்டிமென்டை இவரும் பாலோ செய்கிறார்.

இப்படி தான் விஜயை சிவகார்த்திகேயன் அரசியலில் பாலோ அப் செய்து வருகிறார். விஜய்க்கு எதிராக அரசியல் களத்தில் தனுஷ் குதிக்க இருப்பதும் தனுஷூக்கு எதிரான அரசியல் களத்தில் சிவகார்த்திகேயன் குதிப்பதாக கூறினாலும் விஜய் பார்மூலாவை காப்பியடித்து அந்த வழியில் அரசியல் செய்வதை தான் சிவகார்த்திகேயன் விரும்புகிறார். இது விஜய்க்கும் எதிரான அரசியலாக தான் மாறும் என்று ஜெ பிஸ்மி அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்