- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் அந்த டைரக்டருக்கு தன் படத்தை இயக்க வாய்ப்பளித்த நடிகர் அஜீத்குமார் - ஏகே 65...

மீண்டும் அந்த டைரக்டருக்கு தன் படத்தை இயக்க வாய்ப்பளித்த நடிகர் அஜீத்குமார் – ஏகே 65 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு 1.5 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. கார் ரேஸில் அவர் முழு கவனம் செலுத்திய நிலையில் இப்போதுதான் தனது 64வது படம் மீது அவரது முழு கவனம் திரும்பியிருக்கிறது. இந்த முறை அவரது படத்தை அவரது மனைவி ஷாலினி பெயரில் சொந்தமாக தயாரிக்கிறார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாகிறது. செப்டம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படத்தில் அஜீத்குமாருக்கு நண்பராக மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது பட்ஜெட் குறைப்பு நடவடிக்கையாக இந்த படத்தில் இருந்து மோகன்லால் விலக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

டேர் டெவில் என்ற இந்த படத்தில் நடிக்கும் போதே மற்றொரு படத்திலும் அதாவது தனது 65வது படத்திலும் நடிக்க அஜீத்குமார் முடிவு செய்திருக்கிறார். இந்த படத்தை டைரக்ட் செய்யப் போவது அஜீத்குமாரின் குட் புக்கில் இருக்கும் டைரக்டர் சிறுத்தை சிவா தான். ஏற்கனவே அஜீத்குமார் நடித்த வீரம் வேதாளம் விவேகம் விஸ்வாசம் படங்களை இயக்கியவர்தான் சிறுத்தை சிவா.

ஆனால் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படமும் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படமும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக அண்ணாத்த படம் கூட ஓரளவுக்கு தாக்குபிடித்து ரஜினிக்காக போதிய வசூலுடன் ஓடிவிட்டது. ஆனால் சூர்யா நடித்த கங்குவா படம் தான் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளாக சிறுத்தை சிவா இயக்கத்தில் படம் தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. மேலும் எந்த ஹீரோவும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவும் துணிச்சலாக களத்தில் இறங்கவில்லை. இந்த சூழலில் சிறுத்தை சிவாவுக்கு கம்பேக் தரும் விதமாக அவரது இயக்கத்தில் நடிக்க அஜீத்குமார் ஓகே சொல்லியிருக்கிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்கும் 65வது படத்தை தயாரிக்க போவது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்தான். ஏற்கனவே அஜீத் நடிக்கும் படங்களை பட்ஜெட் காரணமாக தவிர்த்தவர் ஐசரி கணேஷ். ஆனால் இந்த படம் வில்லேஜ் சப்ஜெக்ட் என்பதாலும் பட்ஜெட் குறைவு என்பதாலும் ஓகே சொல்லி விட்டார். டேர் டெவில் ஷூட்டிங் துவங்கிய சில மாதங்களுக்கு பிறகு இந்த படம் ஷூட்டிங்கும் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்