- Advertisement -
Homeபொழுதுபோக்குடைரக்டராக களத்தில் இறங்கிய புரட்சி தளபதி விஷால், அறிமுகமான முதல் படத்திலேயே ஹீரோ மகுடம் சூட்டினாரா?...

டைரக்டராக களத்தில் இறங்கிய புரட்சி தளபதி விஷால், அறிமுகமான முதல் படத்திலேயே ஹீரோ மகுடம் சூட்டினாரா? – வசூல் நிலவரத்தை கேட்டா கலவரமா இருக்குதே!

- Advertisement -

ஒரு திரைப்படம் என்பது பல பேருடைய கூட்டுமுயற்சியில் உருவாகிறது. இதில் தயாரிப்பாளர் முதுகெலும்பாகவும் இயக்குனர் தலையாகவும் இருந்து அந்த படத்தை உருவாக்குகின்றனர். ஒரு படத்தை ஒரு இயக்குனர் தான் நினைத்தது போல கற்பனை செய்தது போல திரையில் படமாக உருவாக்க முயற்சிக்கிறார். தனது ஒளிப்பதிவாளரின் கண்களில் வழியே அந்த திரைப்பட காட்சியை மொத்தமாக கனவு காண்கிறார்.

அப்படிதான் பாரதிராஜா கே பாக்யராஜ் கே பாலசந்தர் மணிவண்ணன் பாலு மகேந்திரா மகேந்திரன் போன்ற இயக்குனர்கள் தனது கனவுகளை திரையில் காட்சிகளாக்கி ரசிகர்களுக்கு தந்தனர். ஒரு இயக்குனர் நினைத்தால் ஒரு படைப்பை காவியமாக தர முடியும். அப்படிதான் தமிழ் சினிமாவில் பல படங்கள் இன்றும் காவியமாக ஜொலிக்கின்றன.

- Advertisement -

அப்படிப்பட்ட இயக்குனர்கள் நடிகர்களாக மாறும்போது தங்களது யதார்த்தமான நடிப்பில் சில நிமிட காட்சிகளிலேயே ரசிகர்களின் மனங்களை வென்று விடுகின்றனர். ஆனால் ஒரு ஹீரோ டைரக்டர் ஆவது என்றால் அதற்கேற்ப அனுபவமும் முதிர்ச்சியும் தெளிவான பார்வையும் தலைமை பண்பும் சிந்தனை திறனும் நிறைய வேண்டும்.

ஒரு இயக்குனர் வெகு எளிதாக ஹீரோ ஆகி ஜெயிக்கலாம். அதற்கு கே பாக்யராஜ் முதல் சேரன் வரை பலரை உதாரணமாக சொல்லலாம். ஆனால் ஒரு ஹீரோ இயக்குனராகி ஜெயிப்பது லேசான விஷயமல்ல. அப்படி ஜெயித்தவர்கள் சொற்பமானவர்கள் தான். ஆனாலும் மீண்டும் அவர்கள் நடிக்க தான் வந்தார்களே தவிர டைரக்ட் செய்வதில் அதிக அக்கறை ஆர்வம் காட்டவில்லை.

- Advertisement -

இதில் சமீபத்தில் மகுடம் படம் மூலம் இயக்குனராக மாறியவர் நடிகர் விஷால். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் 99வது படமாக ரவி அரசு இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க கமிட் ஆன படம் மகுடம். ஆனால் இயக்குனருடன் ஏற்பட்ட மோதலில் அவர் விலகி விட அந்த படத்தை விஷாலே டைரக்ட் செய்த நிலையில் சமீபத்தில் இந்த படம் திரைக்கு வந்தது.

இதுவரை இந்த படத்தின் மொத்த வசூல் ரூ. 2 கோடியை கூட தாண்டவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் கசிந்துள்ளது. இதுவரை விஷால் நடித்த படங்களில் இதுதான் மிக மோசமான தோல்வியை தந்த படம் என்றும் கூறப்படுகிறது. திமிரு சண்டக்கோழி மலைக்கோட்டை சிவப்பதிகாரம் அவன் இவன் போன்ற விஷாலின் படங்கள் ஜெயித்தது இயக்குனர்களால் தான். அதனால் இயக்குனர் என்ற முயற்சியில் மகுடம் இழந்த விஷால் இனி நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் அவருக்கும் தமிழ் சினிமாவுக்கும் நல்லது என்று ரசிகர்கள் அட்வைஸ் செய்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்