- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியலுக்கு வருவீங்களா கேள்விக்கு ஓபனாக பதில் தந்த நடிகர் சிலம்பரசன் - அப்போ எதிர்காலத்துல போட்டியே...

அரசியலுக்கு வருவீங்களா கேள்விக்கு ஓபனாக பதில் தந்த நடிகர் சிலம்பரசன் – அப்போ எதிர்காலத்துல போட்டியே அவங்க 2 பேருக்கு மட்டும்தானா?

- Advertisement -

இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தரின் மகன் சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக சிம்பு வலம் வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி கதை ஆசிரியர் இசையமைப்பாளர் எழுத்தாளர் பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட சிம்பு ரசிகர்களால் எஸ்டிஆர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். வடசென்னை படத்தின் கிளை கதையாக உருவாகி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். சிம்பு வெற்றிமாறன் கூட்டணி முதன்முறையாக இணைந்து உள்ளதால் அரசன் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிம்புவிடம் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகர் சிம்பு கூறுகையில், சிறு வயதிலிருந்தே எனக்கு அரசியலில் ஈடுபாடு இருந்ததில்லை.

என்னுடைய தந்தை டி ராஜேந்தர் அரசியலில் சந்தித்த கஷ்டங்களை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். மக்களுக்காக உழைக்க நினைத்த எனது தந்தைக்கு ஏற்பட்ட சிரமங்கள் என்னையும் பாதித்தது. அதனால் அரசியல் பக்கம் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று நடிகர் சிம்பு கூறினார்.

- Advertisement -

மேலும் தமிழ்நாட்டில் தவெக எப்படி இருக்கிறது என்று சிம்புவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகர் சிம்பு, அவரது 100 நாள் ஆட்சி சரியாக போய்க் கொண்டுள்ளது. ஆனால் அதைப்பற்றி இப்போதே பேசுவது சரி இல்லை. அதற்கான நேரத்தை கொடுக்க வேண்டும். இப்போதைக்கு ஆட்சி நன்றாக செயல்பட்டுக் கொண்டுள்ளது. அண்ணனே தொடரட்டும். அவர் அதை கண்டினியூ பண்ணட்டும் என்றும் கூறியிருக்கிறார்.

நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்க தயாராகியுள்ள நிலையில் நிச்சயமாக நடிகர் சிம்புவும் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஏனென்றால் அவர் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது என்று சூசகமாக கூறியிருக்கிறார். ஒருவேளை தனுஷ் அரசியலில் தீவிரம் காட்டும் பட்சத்தில் அவருக்கு போட்டியாக நடிகர் சிம்புவும் களத்தில் இறங்க வாய்ப்புள்ளது. அப்போது தனுஷ் சிம்பு 2 பேருக்கும் இடையே தான் போட்டி என்று மாறவும் வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்