- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக சார்பில் தேர்தலில் போட்டியிட விஜயிடம் தொகுதி கேட்ட இயக்குனர் யார்? - லோகேஷ்...

தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட விஜயிடம் தொகுதி கேட்ட இயக்குனர் யார்? – லோகேஷ் கனகராஜ் பெயர் அடிபடுகிறதே, உண்மைதானா அது?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படமே பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவர் இயக்கிய கைதி விக்ரம் படங்களும் பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு மாஸ்டர் லியோ கூலி ஆகிய படங்களும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியானது.

ஆனால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட லியோ மற்றும் கூலி ஆகிய படங்கள் வணிக ரீதியாக அதிக லாபத்தை கொடுத்தாலும் காட்டு மொக்க படங்கள் என்ற மோசமான விமர்சனத்தை சந்தித்தது. இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் டிசி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான இந்த படம் வன்முறை ஆக்சன் படமாக இருந்தாலும் ஜென்ஸி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ரூ. 90 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளது. அதனால் டிசி படத்தின் 2ம் பாகம் உருவாவதற்காக அதிக சாத்தியக்கூறு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நேற்று தமிழக சட்டசபையில் பேசிய அமைச்சர் ஆனந்த், கடந்த தேர்தலின் போது ஒரு பிரபலமான இயக்குனர் விஜயை வைத்து படம் எடுத்த இயக்குனர், விஜயிடம் வந்து ஒரு குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் அந்த தொகுதியை தனது கட்சியின் நிர்வாகி 20 30 ஆண்டுகளாக தனக்காக உழைத்த அவருக்கு தான் தர முடியும் என்று மறுத்துவிட்டார் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இதையடுத்து அந்த தொகுதி கிணத்துக்கடவுதான். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் அப்படி விஜயிடம் கேட்டிருக்கிறார். ஏனென்றால் விஜய் நடித்த லியோ மாஸ்டர் படங்களை இயக்கியவர் அவர்தான் என்று தகவல் வேகமாக பரவியது. ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் என்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறுகையில், இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் பேசிய போது, அது உறுதியான நான் இல்லை என்று அவர் மறுத்துவிட்டார். மேலும் சினிமாவில் இயக்குனராக நடிகராக உச்சத்தில் உள்ள அவர் சினிமாவை விட்டு அரசியலுக்கு வர வாய்ப்பில்லை. ஒருவேளை விஜயிடம் அவர் கேட்டிருந்தால் நிச்சயமாக ஏதாவது ஒரு தொகுதியில் அவரை நிற்க வைத்திருப்பார் என்றும் பிஸ்மி அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்