- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் அதிகரிக்கும் வருங்கால முதல்வர் கோஷம் - சட்டசபையில் வருங்கால பிரதமரே என்றும் பேச...

தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் வருங்கால முதல்வர் கோஷம் – சட்டசபையில் வருங்கால பிரதமரே என்றும் பேச ஆரம்பிச்சிட்டாங்களே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இருந்துதான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தார். ஆனால் அவர் அதிமுக கட்சியை துவங்கிய போது எம்எல்ஏவாக இருந்தார் என்பது பலரும் அறியாத உண்மை. அதே போல் அதிமுகவில் இணைந்து அடுத்து தமிழக முதல்வராக புரட்சித் தலைவி ஜெயலலிதா பணிசெய்தார்.

சினிமாவில் கதை வசனகர்த்தாவாக இருந்து அரசியலுக்குள் வந்தவர் கருணாநிதி. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அதே போல் இப்போதை திமுக சட்டசபை எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய் அரசியலில் குதித்தார். ஆனால் வணிக ரீதியாக தான் விஜய் உச்ச நட்சத்திரமே தவிர நடிகர் கமல்ஹாசனை போல சிறந்த நடிப்பால் தேசிய விருதுகளை குவித்த ஒரு மகா கலைஞன் கிடையாது. காதல் மற்றும் ஆக்சன் படங்கள் நடித்து கமர்ஷியல் படங்களால் வியாபார ரீதியான ஒரு முன்னணி நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் நடிப்பதை காட்டிலும் நன்றாக நடனமாடுவார். அதை யாரும் மறுக்க முடியாது. மற்றபடி திமுக அதிமுக மீதான வெறுப்பு தான் அவரை வெற்றி பெற வைத்ததே அன்றி அவர் சமூகத்துக்கான ஆற்றிய பணிகளை பார்த்து மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. இன்றைய அரசியல் சூழ்நிலை அவருக்கு சாதமாக மாறியது. சமூக வலைதளங்களில் தமிழகமே இனி அவர்தான் என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தி ஏமாற்றியதும் உண்மை.

- Advertisement -

விஜய் முதல்வரான பிறகு தமிழ் சினிமாவில் பலருக்கும் முதல்வர் ஆசை வந்துவிட்டது. விரைவில் நடிகர் தனுஷ் தனது புதிய அரசியல் இயக்கத்தை துவங்கி கட்சி பெயரை அறிவிக்க இருக்கிறார். 2 தினங்களுக்கு முன்பு நகை கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயனை பார்த்து ரசிகர்கள், வருங்கால தமிழக முதல்வரே என கோஷமிடுகின்றனர். சட்டசபையில் விஜயை வருங்கால பிரதமரே என்றும் சிலர் பேச ஆரம்பித்து விட்டனர். இது வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க என்று வடிவேல் காமெடி போலவும் விரைவில் மாற வாய்ப்புள்ளது.

மேலும் நடிகர் சிம்புவும், அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிறார். நடிகர் விஷால் ஏற்கனவே நான் அரசியலுக்கு வருவது உறுதி என்கிறார். இதற்கிடையே திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் புஸ்லி ஆனந்தை துணை முதல்வர் வாழ்க என்று கோஷம் எழுப்புகின்றனர். இப்படி முதல்வர் கோஷத்தில் தமிழ் சினிமாவும் தமிழக மக்களும் திணறிப் போயிருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்