நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரெட்ரோ. கடந்த மே 1ம் தேதி இந்த படம் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் டைரக்ட் செய்திருந்தார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். இந்த படம் ரிலீஸ்தான் தள்ளிப் போய்விட்டது. தீபாவளி அடுத்த ஆண்டில் பொங்கல், தமிழ் புத்தாண்டு என ரிலீஸ் தேதி குழப்பத்தில் உள்ளது.
இதற்கிடையே நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 46வது படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடிக்கிறார். வாத்தி லக்கி பாஸ்கர் சங்கராந்தி வஸ்துனம் போன்ற படல்களை இயக்கியவர் வெங்கி அட்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது சூர்யா நடிக்கும் அவரது 46வது படத்துக்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என டைட்டில் வைக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில், இன்னும் படக்குழு தரப்பில் இருந்து அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் சூர்யா 46 என்று தற்காலிக டைட்டில் வைத்து சில மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு துவங்கியது.
இந்த படத்தை குறுகிய கால படைப்பாக 3 மாதங்களுக்குள் எடுத்து முடித்துவிட இயக்குனர் வெங்கி அட்லூரி திட்டமிட்டு படப்பிடிப்பை துவங்கினார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு அம்மாவாக நடிகை ராதிகா சரத்குமார் நடிக்கிறார். முதல் ஒரு வாரம் அவர் ஐதராபாத்தில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்ற நிலையில், அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது.
உடனடியாக சென்னைக்கு வந்த அவர் டெங்கு பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதனால் படப்பிடிப்பு வாரக்கணக்கில் தடைபட்டது. அதனால் நடிகர் சூர்யா குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பினார். இதனால் சில வாரங்கள் படப்பிடிப்பு தடைப்பட்டது.
தொடர்ந்து நடிகை ராதிகா சரத்குமார் உடல் நலம் குணமடைந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார். அடுத்த சில தினங்களில் மீண்டும் சென்னைக்கு கிளம்பி விட்டார். ராதிகாவின் அம்மாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சென்னைக்கு கிளம்பி சென்றுவிட்டார். வயதான அவரது தாயாரின் உடல் நலம் குணமான பிறகே அவர் ஷூட்டிங்கில் மீண்டும் கலந்துக்கொள்ள முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 3 மாதங்களில் எடுக்க திட்டமிடப்பட்ட சூர்யா 46 படம் ஷூட்டிங் அந்தரத்தில் அப்படியே தடைபட்டு நிற்கிறது.





