நடிகர் ராமராஜன் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்தவர். அப்போது நட்சத்திர நடிகையாக நளினி பல படங்களில் நடித்தார். நளினி நடித்த சில படங்களில் உதவி இயக்குனராக ராமராஜன் பணிபுரிந்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு பிறகு பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துக்கொண்டனர்.
அவர்களது திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் ராமராஜனோ நளினியோ மீண்டும் மறுமணம் செய்துக்கொள்ளவில்லை. இப்போதும் இருவரும் நல்ல நட்புடன் இருந்து வருகின்றனர். தங்களது 2 பிள்ளைகளுக்காக சுப நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துக்கொள்கின்றனர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை நளினி கூறியதாவது, ஜோதிடத்தில் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. ஒரு பெரிய ஜோதிடர் சொன்ன மாதிரியே நான் திரை உலகிற்கு வந்தேன். முதன்முதலாக ஜப்பான் கார் வாங்கினேன். பிளைட்டில் பறந்து பறந்து பிஸியாக வேலை செய்தேன்.
மேலும் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு குழந்தைகள் பிறந்த பிறகு ஜோதிடர் ஒருவர் உங்கள் குழந்தைகள் வளர வளர ராமராஜனின் நிலை குலையும் என சொன்னதும் எங்களுக்கு பயம் வந்தது. இதற்காக ஜோதிடர்களை கேட்டு பல பரிகாரங்களை செய்தோம். ஆனால் எதுவும் பலன் கொடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில் ராமராஜன் என்னை பார்த்து உனக்கு நான் வேண்டுமா? பிள்ளைகள் வேண்டுமா? எனக் கேட்டார். நான் பிள்ளைகளோடு இருந்து கொள்கிறேன். நீங்க தனியாக இருந்து கொள்ளுங்கள் என சொல்லி அவரை விட்டு பிரிந்து வந்தேன். ஆனால் இன்னமும் எங்களுக்குள் காதல் இருக்கிறது என்று நடிகை நளினி கூறியிருக்கிறார்.
ஜோதிடம் காரணமாக தான் நாங்கள் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறோம் என்று அந்த நேர்காணல் வாயிலாக நளினி உறுதியாகி கூறியிருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் அரசியலிலும் ஜோதிடம் தான் முன்னிலை வகிக்கிறது. அதே போல் ராமராஜன் – நளினி வாழ்க்கையிலும் ஜோதிடம்தான் முன்னிலை வகித்து அவர்களின் குடும்ப வாழ்க்கையை பிரித்துள்ளது என்று ரசிகர்கள் வேதனையாக கூறுகின்றனர்.





